மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக சிறீலங்காவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாடம்!

மியன்மார் நாட்டில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் படுகெலைகளை நிறுத்தக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

வவுனியாவில் நகர முஸ்லிம் பள்ளிவாசல் முன்பாக இன்று பிற்பகல் 1 மணியளவில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மியன்மார் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் படுகொலையைக் கண்டித்தும் ஐ.நாவை தலையிடக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

நகர பள்ளிவாசல் தொழுகையின் பின் பள்ளிவாசல் முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் தர்மலிங்கம் வீதி வழியாக சென்று மீண்டுட் பள்ளிவாசல் வாயிலை வந்தடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இனப்படுகொலையை உடனே நிறுத்து, ஐ.நாவே தலையிடு, எண்ணெய்வள நாடுகளே மியன்மாருக்கு எண்ணெய் வழங்காதே, முஸ்லிம்களை அழிக்காதே போன்ற கோசங்களுடன் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கான மகஜர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார அவர்களிடமும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, மியன்மாரில் முஸ்லிம் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வவுனியா நகரப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப்பேரணிக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு வழங்கியதுடன் இவ்வாறான கொடூரச் செயல்களை வன்மையாக கண்டிப்பதாக வவனியா வர்த்தகர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்