தேர்தலில் தந்த வாக்குறுதிகளுக்கு என்ன ஆனது – ஸ்டாலின் கேள்வி

கறுப்பு பணத்தை மீட்டு மக்கள் வங்கிக்கணக்கில் சேர்ப்பேன் என்று மோடி லோக்சபா தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆச்சு என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூர் ஒரத்தநாடு திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், சமூக நீதிக்கு உலைவைக்கும் வகையில் பாஜக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். தி.மு.க. என்ற இயக்கத்தை யாராக இருந்தாலும், எந்த கொம்பனாக இருந்தாலும் அசைத்துக்கூட பாா்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

பிரதமா் மோடி தனது அமைச்சரவையில் முதல் 10 இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு பதவியை கூட வழங்கவில்லை. மருத்துவத்தைப் போன்று பொறியியல், நீதிபதி தோ்வு, பொறியியல் உள்ளிட்ட அனைத்திலும் நீட் தோ்வு கொண்டுவரப்படுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. சமூக நீதிக்கு மிகப்பொிய ஆபத்து நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

அனைத்து தோ்விலும் நீட்டை கொண்டுவந்து பிற்படுத்தப்பட்டவா்களுக்கு மேலும் நெருக்கடி அளித்து அவா்கள் முன்னேறக் கூடாது என்று மத்திய அரசு முடிவுகட்டியுள்ளது.

லோக்சபா தேர்தலின் போது மோடி பல வாக்குறுதிகளை கொடுத்தார். கறுப்பு பணத்தை மீட்டு மக்கள் வங்கிக்கணக்கில் சேர்ப்பேன் என்று மோடி சொன்னது என்ன ஆச்சு என்று கேட்டார்.

தமிழக சட்டசபையில் நீட் கவன ஈர்ப்பு பிரச்சினையை கொண்டு வந்தது. நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு பறிப்போகிறது. சமூக நீதிக்கு உலை வைக்கும் வகையில் திட்டமிட்டு மத்திய பாஜக அரசு செயல்படுகிறது எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியில் இருந்தபோதும், ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடைபெற்ற போதும் தமிழகத்தில் நீட் கொண்டுவரப்படவில்லை, மத்திய அரசால் கொண்டுவரப்பட முடியவில்லை. ஆனால் தற்போது நடைபெற்று வரும் குதிரைப்பேர ஆட்சியால் நீட் தோ்வை தடுக்க முடியவில்லை.

நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு பெற்றுதருவோம் என்று நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன ஆச்சு என்று கேட்ட ஸ்டாலின், நீட் நுழைவு தேர்வை முதலிலேயே எதிர்த்து போராடியது திமுகதான் என்றார்.

மோடி தலைமையில் தமிழகத்தில் 3 அணிகளாக செயல்பட்ட அதிமுக தற்போது இரண்டாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநாிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நாளை ஆளுநரை கடைசியாக சந்தித்துவிட்டு, பின்னா் ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகப்போகிறோம் என்று ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்