ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நாளை ஆரம்­ப­ம்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்­கட்­கி­ழமை ஜெனீ­வாவில் ஆரம்­ப­மா­கின்­றது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் போர்க் குற்ற ஆதார விவ­கா­ரத்தை ஐ. நா. மனித உரி­மைகள் பேர­வையின் கவ­னத்­திற்கு கொண்டு வரும் நட­வ­டிக்­கையில் அனைத்­து­லக மனித உரி­மைகள் அமைப்­புகள் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றன.

எனவே நாளை ஆரம்­பிக்­கப்­பட உள்ள மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை பாரிய நெருக்­க­டி­களை எதிர்­கொள்ளும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.

இதனால் அனைத்­து­லக குற்­ற­வியல் விசா­ரணைப் பொறி­மு­றைக்குள் இலங்­கையை உள்­வாங்­கு­வ­தற்­கான அழுத்­தங்­களும் வலி­யு­றுத்­தல்­களும் ஏற்­ப­டலாம் என எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது.

ஜெனீ­வா­வி­லுள்ள இலங்கை வதி­விடப் பிர­தி­நிதி ரவிநாத் ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு ,கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்­ளது.

ஆரம்ப நிகழ்வில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் தலைவர் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் ஆகியோர் சிறப்­புரை ஆற்­றவு ள்ளனர். இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் விவ­கா­ரங்கள் நிகழ்ச்சி நிர­லுக்குள் உள்­வாங்­கப்­பட வில்லை.

ஆனால் ஐ. நா. வின் சிறப்பு அந்­தஸ்­து­டைய சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்­விகள் எழுப்­பு­வ­தற்­காக வாய்ப்­புகள் அதிகம் காணப்­ப­டு­கின்­றன.

பொது­வான விவா­தங்­களில் பல்­வேறு தலைப்­புக்­களின் கீழ் உரை­யாற்­ற­வுள்ள சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் , காணாமல் போனோர் மற்றும் இறு­திக்­கட்ட போரில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­ப­டு­கின்ற பார­தூ­ர­மான மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் என பல்­வேறு விட­யங்கள் குறித்து கேள்­வி­களை முன்­வைத்து அனைத்­து­ல­கத்தின் வலி­யு­றுத்­தல்­க­ளுக்­கான சூழலை உரு­வாக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் இலங்­கை­யி­லி­ருந்து ஜெனீவா செல்லும் மனித உரிமை செயற்­பாட்டு பொது அமைப்­புக்கள் உப­குழுக் கூட்­டங்­களில் கலந்­து­கொண்டு கருத்­துக்­களை தெரி­விக்­க­வுள்ள நிலையில் ,இது மிகவும் நெருக்­க­டி­யான நிலை­மை­களை உரு­வாக்கக் கூடும் என்றும் அனைத்­து­லக உண்மை மற்றும் நீதிக்­கான திட்டம் , சர்­வ­தேச மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் மற்றும் சர்­வ­தேச மன்­னிப்புச் சபை போன்ற சர்­வ­தேச அமைப்­புகள் இலங்கை குறித்து கடு­மை­யான கேள்­வி­களை எழுப்பும் என்றும் கூறப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக அனைத்­து­லக உண்மை மற்றும் நீதிக்­கான திட்டம் தலை­மை­யி­லான, மனித உரிமை அமைப்­புகள் முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக போர்க் குற்ற வழக்கை தாக்கல் செய்­துள்­ளன.

2007ஆம் ஆண்டு தொடக்கம் இறு­திக்­கட்ட போர் இடம்­பெற்ற 2009ஆம் ஆண்டு வரை ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய வன்னிப் படை­களின் தள­ப­தி­யாக செயற்­பட்ட நிலையில், வவு­னி­யாவில் உள்ள ஜோசப் முகாமில் இருந்து இவர் இரா­ணுவ நட­வ­டிக்­கையை மேற்­பார்வை செய்­த­தாக போர்க் குற்­ற­வ­ழக்கில் குற்­றச்­சாட்டு முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் 2009ஆம் ஆண்டு இறு­திக்­கட்டப் போரில் ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­யவின் மேற்­பார்­வையில் இருந்த இரா­ணுவப் பிரி­வு­களால், மருத்­து­வ­ம­னைகள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தா­கவும், ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கொல்­லப்­பட்­ட­தா­கவும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­தா­கவும், சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­தா­கவும் இந்த வழக்கில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

எனவே நாளை திங்கட் கிழமை ஆரம்­பிக்­கப்­பட உள்ள மனித உரி­மைகள் கூட்­டத்­தொ­டரில் இந்த விடயம் தொடர்பில் இலங்கைத் தரப்­பி­ன­ரிடம் கேள்­விகள் முன்­வைக்­கப்­ப­டலாம்.

அதே போன்று ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய இறு­திக்­கட்ட போரில் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­மைக்­கான ஆதா­ரங்கள் உள்­ள­தாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்த கருத்­துக்கள் அனைத்­து­லக மனித உரி­மைகள் அமைப்­பு­களால் ஜெனீ­வாவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­ப­டலாம் என்ற அச்சம் இலங்கைத் தரப்­பிற்கு உள்­ளது.

இதே­வேளை, சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் மற்றும் சர்­வ­தேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் பல்வேறு உபகுழுக் கூட்டங்களை ஜெனீவா வளாகத்தில் நடத்தவுள்ளன.

இதன் போது இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

எனவே நிகழ்ச்சி நிரலில் இலங்கை குறித்த விவகாரம் காணப்படா விடினும் வலியுறுத்தல்களும் கேள்விகளும் நெருக்கடியான நிலைமையை உருவாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்