சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி!

சசிகலாவின் கணவர் நடராஜன் சிகிச்சைக்காக பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரது கணவர் நடராஜன் நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

கடந்த சில நாள்களாகவே நடராஜன் கல்லீரல் பிரச்சனைக்கு கேரள முறைப்படி சிகிச்சை பெற்று வந்தார். அதில் குணமடையாததால் நேற்று இரவு 9.30 மணியளவில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு பெயர் பெற்ற சென்னை சோளிங்கநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு இடையில் சசிகலா தனது கணவரின் உடல்நிலை காரணமாக பரோலில் தன்னை விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை கர்நாடக அ.தி.மு.க செயளாலர் புகழேந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்