புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியில் கடந்த 1999ஆம்ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி வான் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 26பேர் கொல்லப்பட்டனர்.
இவர்களின் 18ஆம் ஆண்டு நினைவுநாள் எதிர்வரும் 15ஆம்திகதி வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு அதே இடத்தில் நடைபெறவுள்ளது.
வன்னி குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது. இதன்போது நினைவாலயத்துக்கான அடிக்கல்லும் நடப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு விமானத் தாக்குதலில் மக்கள் கொல்லப்பட்ட இடம் கடந்தவாரம் தொண்டுப் பணிமூலம் துப்புரவு செய்யப்பட்டது.
விமானத் தாக்குதலில் உயிர்நீத்த மக்களின் உறவினர்கள் தற்போது நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்க ளிலும் வசித்து வருகின்றனர்.
இதனால் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள் ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

