கோத்தபாய விடுத்த அழைப்பை நிராகரித்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர்!

புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ராக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள வெளிச்­சம் (எலிய) அமைப்­பின் கூட்­டங்­க­ளில் கலந்து கொள்­ளு­மாறு முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச விடுத்த அழைப்பை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­கள் நிரா­க­ ரித்­துள்­ள­னர்.

அந்த அமைப்­பின் முத­லா­வது கூட்­டம் அண்­மை­யில் பொர­லஸ்­க­மு­வ­வில் நடை­பெற்­றது. இதன் அடுத்த கூட்­டம் கண்­டி­யில் நடை­பெ­ற­வுள்­ளது. தனது அமைப்­பின் கூட்­டங்­க­ளில் கலந்­து­கொள்­ளு­மாறு கோத்­த­பாய ராஜ­பக்ச சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­கள் சில­ருக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தார்.

அர­ச­மைப்­புக்கு எதி­ரான இந்­தக் கூட்­டங்­க­ளில் கலந்­து­கொள்­ளா­தி­ருக்­கத் தீர்­மா­னித் துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­கள், இது இன­வாத அடிப்­ப­டை­யில் செயற்­ப­டும் அமைப்­பாக இருப்­ப­தால் அதில் கலந்­து­கொள்ள முடி­யாத நிலை இருப்­ப­தா­க­வும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்