மனித உரிமைகளை மதிக்காத இந்தியா – ஜ.நா கவலை

இந்தியாவில் மதரீதியான சகிப்பின்மை அதிகரித்து வருவதாக ஐநா மனித உரிமை ஆணையர் (Zeid Ra’ad Al Hussein) ஜேத் ராத் அல் ஹூசேன் வேதனை தெரிவித்துள்ளார். ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற முடிவு, கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இதில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் மதரீதியான மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. இதனால் அடிப்படை மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள 40 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற மத்திய அரசு முடிவெடுத்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு அல்ஹூசேன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்