தேசிய மட்டத்தில் குமுழமுனை மகாவித்தியாலய மாணவி சாதனை!

தேசிய மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் கட்டுரை வரைவதில் முல்லைத்தீவு மாவட்டம், குழுழமுனை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

பகீரதன் லாசன்ஜா எனப்படும் மாணவியே பிரிவு 2இல் முதலிடம் பெற்றுள்ளார்.

கொழும்பிலுள்ள டி.எஸ். சேனநாயக்கா கல்லூரியில் நடைபெற்ற தமிழ்த் தினப் போட்டியில் குறித்த மாணவி வெற்றி பெற்றார்.

இவர் கல்வியில் மென்மேலும் வளர இவரது பாடசாலைச் சமூகம் வாழ்த்தி நிற்கின்றது. அத்துடன் இவருக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களான ச.சந்திரசேகரம், திருமதி.ந.பாலநாதன் ஆகியோரையும் பாடசாலை நிர்வாகம்பாராட்டியுள்ளதது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*