தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி ஆறாம் நாளாக நடைபெறும் ஈருருளிப் பயணத்திற்கு பிரஞ்சு அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் ஆதரவு.

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் இயற்கையுடன் போராடி 500 கிலோ மீட்டர்களைத் தாண்டி இன்றை தினம் [11.09.2017] பிரான்சு நாட்டை வைந்தடைந்தது.SAREEGUEMINES மாநகர சபை முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதநேயப் பணியார்களை வரவேற்று சிற்றுண்டி , சுடுபானம், குளிர்பாணம், என்பன கொடுத்து தமிழ் மக்களுக்கு சிங்கள பேரினவாத அரசுகளால் இழைக்கபட்ட அநீதிகளையும், தமிழினப்படுகொலையையும், நடந்துகொண்டிருக்கும் தமிழ் இன அழிப்பையும் கேட்டறிந்து கொண்டதுடன் .

பிரஞ்சு அரசு ஐக்கியநாடுகள் அவையின் பரிந்துரையை நடைமுறைப் படுத்த தொடந்து அழுத்தம் கொடுக்கும் எனவும் தமிழ் மக்களுக்கு குடியவிரைவில் நீதி கிடைத்து விடுதைலை பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் உறுதியளித்திருந்தனர். அதனைத் தொடர்து SARRE-UNION நகரபிதா, உதவி நகரபிதாக்கள் மனிதநேயப் பணியாளர்களை வரவேற்று உபசரித்து தமிழினப் படுகொலையை அனைத்துலகம் ஏற்றுக்கொள்ளவும் ,அதற்கான நீதி கிடைக்கவும் பிரஞ்சு நாட்டு மேல்ச்சபையிலும் குரல் கொடுப்பதாக உறுதி அளித்ததுடன் ஈருருளிப்பயணதில் ஈடுபட்டுலோரின் உடல்நலத்தையும் கேட்டறிந்ததுடன் டென்ன்மார்க் நாட்டிலிருந்து வந்து படுகாயமடைந்த திரு மகேஸ்வரன் அவர்கள் படுகாயமடைந்ததையிட்டு மனம் வருந்துவத்க்கவும் அவர் உடல் நலம் பெற இறைவனை வேண்டுவதாகவும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்குமென தாம் நம்புவதகாகவும் கூறி எங்கள் அறவழிப் போராட்டத்துக்கு பாராட்யும் தெரிவித்து.

பிரஞ்சு காவல்துறையின் உதவியுடன் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.இன்றைய ஈருருளிப்பயணம் 90கிலோ மீட்டர்களைக் கடந்து PHALSBOURG மாநகத்தில் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நிறைவுபெற்றது.

நாளைய தினம் [12.09.2017] பிற்பகல் 16.30 மணிக்கு ஸ்ராஸ்பூர்க் PLACE KLEBER [HOMME DE FER] எனும் இடத்தை வைந்தடைய உள்ளது.தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்பாக அனைத்துலக விசாரணையை நாடாத்தக்கோரி ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளவோரை வரவேற்க்கவென நடைபெறவுள்ள இக்கவனயீர்பு நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளும்மாறு கேட்டுக்கொள்கிறோம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்