ஜ.நா மனிதவுரிமை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜெனிவா சென்றடைந்தார் சிவாஜிலிங்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் 36வது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் இனப்படுகொலைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைக்கும் நோக்குடன் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான சிவாஜிலிங்கம் தலைமையிலான ஐவர் அடங்கிய குழு இன்று மதியம் ஜெனிவா சென்றடைந்துள்ளனர்.

இக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தியாகராசா கஜதீபன் புவனேஸ்வரன் முன்னாள் உறுப்பினர் மயூரன் ஆகியோர் அடங்குகின்றனர்.இவர்கள் நாளை மனித உரிமை தொடர்பான அமர்வுகளில் கலந்து விவாதிப்பார்கள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*