ஐந்து இலட்சம் பெறுமதியான வேளாண்கருவிகள் வழங்கல். இருபத்தாறு பயனாளிகளுக்கு வழங்கிவைத்தார் ரவிகரன்.

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களால் 2017இன் பிரமாண அடிப்படையிலான ஒதுக்கீட்டில் இருந்து ஐந்து இலட்சம் உரூபாய் நிதியானது வேளாண்கருவிகளை வழங்கவென ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒதுக்கிட்டின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட வேளாண்கருவிளானவை தெரிவுசெய்யப்பட்ட இருபத்தாறு பயனாளியர்க்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் தனது 2017 ஒதுக்கீட்டின் மூலம் ரூபா ஐந்து இலட்சத்தை விவசாய உபகரணங்களுக்காக ஒதுக்கியிருந்தார். தெரிவு செய்யப்பட்ட இருபத்தி ஆறு பயனாளிகளுக்கு குறித்த கருவிகள் வழங்கும் நிகழ்வானது 2017.09.13ஆம் நாளாகிய இன்று பிற்பகல் மூன்று மணியளவில் முல்லைத்தீவு பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்கள் தலைமையில் அவரது பணிமனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ரவிகரன் அவர்கள் எமது மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மிகவும் அதிகம். தேவைகளும் அதிகமாக உள்ளன. இந்நிலையில் முடிந்தளவு உதவிகளை செய்து வருகின்றேன். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளாகவுள்ள நீங்கள் இதன் மூலம் பயனடைய வேண்டும். உங்களுடைய வளர்ச்சியின் மூலம் தான் இத்திட்டத்திங்களை நாம் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதன்பின்பு பயனாளிகளுக்கு கருவிகள் வழங்கப்பட்டன. இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் சுடலைக் காணியைக் கூட சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. கீரிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை
யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம் செயற்றிட்ட வரைவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதரீதியாக பலம்பெற்றிருந்த சூழலில் சமாதான உடன்படிக்கை ஏற்படப்போகிறது என்ற நிலையில் குமார் பொன்னம்பலம் உயிரோடு இருந்தால்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*