வவுனியாவில் 3 கைக்குண்டுகள் மீட்பு

வவுனியா மூன்றுமுறிப்பு பிரதேசத்தின் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து  மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நபர் ஒருவர் பல வருடங்களின் பின்னர் வீட்டுத்தோட்டத்தை சுத்தம் செய்யும் போது அங்கு புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகளைக் கண்டுள்ளார்.

பின்பு சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கைக்குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கைக்குண்டுகள் பொலித்தின் பையில் சுற்றப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று (18.02) இரவு 11.15மணியளவில் கைது செய்துள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தல் 2018க்கான பரப்புரைக் களம் அரசியல்வாதிகளிடையே சூடுபிடித்திருக்கிறது. அந்த சூடுபிடித்தலுக்கான பேசுபொருளாக அபிவிருத்தி அபிவிருத்தியுடன் கூடிய தேசிய அரசியல்
வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இன்று (03.02) மாலை 4.30 மணியளவில் கவிஞர் அருந்தவராசா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*