தலவாக்கலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் பாதசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர் மீது வேன் மோதியதில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை தமிழ் மகா விதியாலயத்திற்கருகிலே இன்று (புதன்கிழமை) இரவு 6.30 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய வேன் பொலிஸாரினால் நிறுத்த முற்பட்ட போதும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் லிந்துலை கூம்மூட் பகுதியைச் சேர்ந்த சந்தன பிலிப் என இனங்காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*