நல்லூரில் தியாகி திலீபன் நினைவுத் தூபிக்கு முன் ரயர் எரித்த விசமிகள்

நல்லூரில் தியாகச் செம்மல் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இனந்தெரியாத நபர்கள் சிலர் ரயர் ஒன்றைப் போட்டுக் கொளுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இன்று இரவு (16) பத்து மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

நல்லூரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு பின்னர் சிறிலங்கா அரச படைகளாலும் ஈ.பி.டி.பி போன்ற துணை ஆயுதக் குழுக்களாலும் சேதமாக்கப்பட்ட திலீபனின் நினைவுத் தூபி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவு தினம் நேற்று ஆரம்பமாகியதைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும் இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று இரவு அந்த இடத்திற்குச் சென்ற சில இனந்தெரியாத, அரச ஆதரவுபெற்ற கைக்கூலிகள் ரயர் ஒன்றை நினைவுத் தூபிக்கு முன்பாகப் போட்டு எரித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் நிலமைகளை அவதானித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் சு.சுதாகரன், இச் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.

மேலும் எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் எமது இலட்சியப் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

தியாகச் செம்மல் #திலீபன் அவர்களது நினைவுத் தூபிக்கு முன் தேச விரோதிகளால் ரயர் எரிப்புhttp://eeladhesam.com/?p=4072

Posted by Eeladhesam News on Samstag, 16. September 2017

About இலக்கியன்

மறுமொழி இடவும்