திலீபனின் நிகழ்வைக் குழப்பிய ஆனோல்ட் சிறிலங்கா அரசின் கைக்கூலி, கஜேந்திரன் கண்டனம்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆனோல்ட் சிறிலங்கா அரசின் கைக்கூலியாகவும் தமிழினத்தின் கோடரிக் காம்பாகவும் செயற்படுகின்றார் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தியாகி திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான நேற்று வெள்ளிக்கிழமை (15) நல்லூரில் தியாகி திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் நினைவேந்தல் தொடங்கிய போது அதைக் குழப்பும் வகையில், திலீபனின் நினைவுத் தூபிக்கு சமீபமாக நிதி நிறுவனம் ஒன்றின் ஒன்றுகூடல் இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் இ.ஆனோல்ட் கலந்துகொண்டார். தமிழ்த் தேசிய உணர்வுகளை மக்களிடம் இருந்து அகற்றும் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆனோல்ட் போன்ற அரசயல்வாதிகளும் துணையாக நிற்கின்றமை தொடர்பாக தமிழ் மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்

இந்த நிலையில் மேற்படிச் சம்பவம் குறித்து தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிட்ட கஜேந்திரன்,

அவர் அங்கு மேலும் ஆக்ரோசமாகக் கருத்துக் கூறுகையில்,

மாவீரன் திலீபனுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தபோது, அவரின் நினைவிடத்திற்கு மிகச் சமீபமாக சிங்கள இனவெறி அரசின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அந்த நிகழ்வில் சுமந்திரனின் அடியாளும் சிறிலங்கா அரசின் கைக்கூலியுமான ஆனோல்ட் கலந்துகொண்டமை மிகக் கேவலமானது.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக எமது மக்களின் உணர்வுகளையும் உரிமைக் குரலையும் நசுக்கிவிட்டு உங்கள் காரியங்களைச் சாதித்துவிடலாம் என நினைத்தால் உங்களைப் போன்ற முட்டாள்கள் உலகில் யாரும் இல்லை.

About இலக்கியன்

மறுமொழி இடவும்