முல்லைத்தீவில் பொலிஸார் மீது கல்வீச்சு!

முல்லைத்தீவு, மணலாறு ஜனகபுரம் பகுதியில் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸாரும் முல்லைத்தீவு – வெலிஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டதுடன், போதைப்பொருள் விற்பனை செய்த நபரையும் கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்தே போதைப்பொருள் விற்பனை செய்த நபரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இரண்டு பொலிஸார் மீதும் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய ஏனைய நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்