ஐ.நா அணுஆயுத தடை உடன்பாட்டில் கையெழுத்திட இலங்கை மறுப்பு

ஐ.நாவின் அணுஆயுத தடை உடன்பாட்டில், இலங்கை கையெழுத்திடுவதற்கு வாய்ப்பில்லை என்று அரசாங்க வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

அணு ஆயுதங்களைத் தடை செய்யும் ஐ.நா பிரகடனம் தொடர்பான உடன்பாடு, எதிர்வரும் 20ஆம் நாள் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரின் போது, கையெழுத்திடப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் போது கலந்துரையாடப்படவுள்ள விடயங்களில், இந்த விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவின் கடைசி நேர அழுத்தங்களால், இலங்கை உடன்பாட்டில் கையெழுத்திடுவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த அணு ஆயுத தடை பிரகடனத்தை அமெரிக்கா விரும்பவில்லை. இந்த உடன்பாட்டை சட்டபூர்வமாக்குவதற்கு, இதில் குறைந்தபட்சம் 50 நாடுகள் கையெழுத்திட வேண்டும்.

கடந்த வெள்ளிக்கிழமை வரை, இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு 38 நாடுகள் மாத்திரம் இணங்கியுள்ளன. எனினும், இதில் கையெழுத்திடும் நாடுகளின் எண்ணிக்கை வேறுபடலாம்.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. எனினும் ஏனைய தெற்காசிய நாடுகள் இந்த பிரகடனத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்