புத்தூர் மயானப் பிரச்சினைக்கு மூன்று வாரத்தில் தீர்வு, வடக்கு முதல்வர் உறுதி

மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றுமாறு கோரி புத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

புத்தூர் மக்கள் அங்குள்ள கலைமதி சனசமூக நிலையத்திற்கு முன்பாக கடந்த ஜீலை மாதம் 12 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது ஊருக்கு நடுவே உள்ள மயானத்தை அகற்றுமாறு கோரி இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

குறித்த மயானம் அப்பகுதியில் உள்ளமையால் தாங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் என மக்கள் தெரிவித்தனர்.

தூரப் பிரதேசங்களில் இருந்து வருபவர்களே அந்த இடத்தில் சடலங்களை எரித்து வருகின்றனர் எனவும் இதனை நிறுத்தி, அந்த மயானத்தை வேறிடத்திற்கு மாற்றுமாறும் அவர்கள் போராடி வருகின்றனர்.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில், அவர்களின் வழிநடத்தலில் இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இப்போராட்டம் தொடர்பாக யாரும் அக்கறை செலுத்தாத நிலையில், மேற்படி போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தமது போராட்டத்தை யாழ்.மாவட்டச் செயலகம், வடக்கு மாகாண சபைத் தலைமையகம் போன்றவற்றுக்கு முன்பாகவும் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், இன்று அங்கு சென்ற வடக்கு முதலமைச்சர் மக்களுடன் கலந்துரையாடியதுடன் மயானத்தையும் பார்வையிட்டார்.

இன்னும் மூன்று வாரங்களுக்குள் அதற்குத் தீர்வைப் பெற்றுத்தருவார் என அவர் மக்களுக்கு உறுதியளித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்