அர­சி­யல் தீர்வு வரும் வரா­ம­லும் போக­லாம் – சிங்கக்கொடி சம்பந்தன்

தீர்வு வரும் வரா­மல் போக­லாம். நாங்­கள் நிதா­ன­மா­கச் செயற்­பட வேண்­டும். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இரு­வ­ரும் தமது கட்சி உறுப்­பி­னர்­களை ஒழுங்­காக – முறை­யாக வழி­ந­டத்த வேண்­டும். இனி­மேல்­தான் முக்­கிய தரு­ணங்­கள் இருக்­கின்­றன.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

தமிழ்ப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மைப் பலம், பொது வாக்­கெ­டுப்­பில் வெற்றி பெறக்­கூ­டிய சூழல் இருக்­கு­மா­யின் நாம் அந்­தச் சந்­தர்­பத்தை விட முடி­யாது. நிதா­ன­மாக – பக்­கு­வ­மாக விட­யங்­க­ளைக் கையாள வேண்­டும். வாயைப் பொத்­திக் கொண்டு விட­யங்­களை நகர்த்த வேண்­டும்.

அர­ச­மைப்­புத் தொடர்­பில் மகிந்­த­வு­டன் பேசி­னேன். தமிழ் மக்­க­ளின் தீர்­வுக்கு பல்­வேறு உறு­தி­களை இந்­தி­யா­வுக்கு நீங்­கள் (மகிந்த) வழங்­கி­னீர்­கள் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­னேன். அத­னைச் செய்­ய­வில்லை என்­ப­தை­யும் கூறி­னேன்.
தமிழ் மக்­க­ளின் உரி­மை­க­ளைப் பெற்­றுக் கொடுக்க வேண்­டிய பெரும் பொறுப்பு இந்­தி­யா­வுக்கு இருக்­கின்­றது. இந்­தியா எங்­க­ளைக் கைவிட முடி­யாது. கைவி­ட­வும் மாட்­டாது.

13ஆவது திருத்­தச் சட்­டத்­தில் எமக்கு உடன்­பாடு இல்­லை­யா­யி­னும், அதை முற்­றாக நிரா­க­ரிக் முடி­யாது. அது எமக்­கான இறு­தித் தீர்­வும் அல்ல. புதிய அர­ச­மைப்­பில் ஒற்­றை­யாட்­சி­யைக் கைவி­டு­வ­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி இணங்­கி­யுள்­ளது. 13ஆவது திருத்­தத்­தி­லி­ருந்து எவ்­வ­ளவோ தூரம் நாம் முன்­னேறி வந்­துள்­ளோம். புதிய அர­ச­மைப்­பில் நூறு வீதம் திருப்தி இல்­லை­யா­யி­னும், அதில் எவ்­வ­ளவோ முன்­னேற்­ற­மான விட­யங்­கள் உள்­ளன. தற்­போது நாடா­ளு­மன்­றத்­துக்கு வரு­வது இடைக்­கால அறிக்­கை­தான்.

கூட்­டாட்சி என்று நாம் சொற்­க­ளில் தொங்­கிக் கொண்­டி­ருக்­கக் கூடாது. உல­கில் பல நாடு­க­ளில் எந்­தப் பெய­ரும் இல்­லா­மல் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்­டி­ருக்­கின்­றன. நாம் கிடைத்­துள்ள சந்­தர்­பத்தை தவ­ற­வி­டக் கூடாது – என்­றார்

தொடர்டர்புடைய செய்திகள்
மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே
அரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*