பிரான்சில் நடைபெற்ற தியாக தீபம் அறிவாய்தல் அரங்கு

பிரான்சு தமிழ்ச்சோலை தiலைமைப்பணியகத்தின் கல்விச்சேவைகளில் ஒன்றான தஞ்சாவூர் பல்கலைக்கழக இளங்கலைமாணிப் பட்டப்படிப்பு மாணவர்களால் தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கு 2017 பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேச தமிழ்ச்சோலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் உண்ணா மறுப்புப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி மூன்றாம் நாளான 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரிகேடியர் தமிழ்ச் செல்வனின் துணைவியார் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வுக்கான மங்கள விளக்கேற்றலினை தமிழ்ச்சோலை தலைமைப்பணியக பொறுப்பாளர் திரு . nஐயக்குமாரன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மகேஸ் முக்கிய உறுப்பினர் திரு. மேத்தா மற்றும் தமிழ்ச்சோலை பணியக செயற்பாட்டாளர் திரு. பேரின்ப மூர்த்தி தமிழ் இணைய பல்கலைக்கழக மாணவி திருமதி . சிறீப்பிரியா அவர்கள் கலாநிதி. சி. தனராஐh ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

வரவேற்புரையை தலைமைப்பணியக செயற்பாட்டாளர் செல்வன். தவராசா சஞ்சித் அவர்கள் வழங்கினார். ஏற்புரையை செயற்பாட்டாளர் திரு. அகிலன் அவர்கள் வழங்கியிருந்தார். இந்த ஆய்வு ஏதற்காக அதன் தேவை அவசியம் பற்றி கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஆய்வுநூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. முக்கியமானவர்களை முதலில் மதிப்பளிக்கும்வகையில் வழங்கப்பட்டது, மக்களும் அவற்றினை பெற்றுக்கொண்டனர்.

ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளை பேச்சின் மூலம் வழங்கினார். முதலில் ” புலம்பெயர் மண்ணில் பிள்ளைகள் வளர்ப்பதில் இருக்கும் அறைகூவல்களும் தீர்வு முனைப்புகளும் என்ற ஆய்வுனை திருவாட்டி விஐயராஐh ஞானமலர் அவர்களும்

” தமிழீழ விடுதலைப்போராட்டமும் ஈழ- ருசிய புதினங்களின் பங்களிப்பும் என்ற ஆய்வினை திருவாளர் சடாச்சரம் குகதாசன் அவர்கள் முதலில் வழங்கினார்.

புலம்பெயர் சூழ்நிலையில் வளர்ந்துவரும் எமது பிள்ளைகளை பெற்றோர்கள் பாதுகாவலர்கள் இனமொழி உணர்வாளர் செயற்பாட்டாளர் படுகின்ற சாதக பாதக நிலைகளை ஓரளவிற்கு தனக்கு வழங்கப்பட்ட நேரத்திற்குள் வழங்கியிருந்தார். இந்த புலம் பெயர் வாழ்வானது நான்கு தசாப்தங்களை கொண்டது. அவற்றின் முக்கியமான விடயங்களையே ஓரளவிற்கு சொல்லியிருந்தார்.

தமிழீழ விடுதலைப்போராட்டமும் ஈழ ருசிய புரட்சி பற்றி இன்றைய காலத்தின் அவசியத்தை கொண்டு இந்த ஆய்வினை ஒரு இளைஞரே அதை ஆய்வு செய்திருந்ததும் நாம் தமிழர்கள் ஏன் உரிமையோடு வாழவேண்டும் ஏன் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் அந்த போராட்டம் தமிழர்களுக்கு அவசியமா? உலகமூத்த மொழிகளின் முதல் மொழிதான் தமிழ்தான் என்பதை உலகப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வுகளும் இலங்கை தீவில் உள்ள சிங்கள மொழித்தோற்றம் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய பல்வேறு ஆதாரபூர்வமான ஆதாரங்களுடன் தனது ஆய்வினை சமர்ப்பித்து பாராட்டுதல்களைப் பெற்றிருந்தார்

அதனைத் தொடர் இணையக்கல்வி மாணவிகளின் நூலைப்படி சங்கத்தமிழ் நூலைப்படி என்ற பாடலுக்கு நடனத்தை வழங்கினார்கள்.

” அடுத்த ஆய்வாக புலம்பெயர்ந்தோரில் முதல்தலைமுறையாகிய ஈழத்து மூதாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் தனது ஆய்வினை பேசியிருந்தார். தாய்மண்ணில் சுதந்திரமாக வாழ்ந்து தம் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கடைப்பிடித்து மொழியும் மண்பற்றும் வீரத்திற்கும் இலக்கணக்கமாக வாழ்ந் பெரும்பான்மை தமிழர்கள் காலச்சூழ்நிலையால் தமிழர் தாம் இழந்து போன தமது உரிமைக்கான போராட்டத்தில் முகம் கொடுக்க முடியாது தமது பிள்ளைகள் புலம்பெயர்ந்து பிறநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றதும் அவர்கள் பிறநாடுகளில் தம்மை வழிப்படுத்திய பின்பு தமது பெற்றோர்களை அழைத்து தம்முடன் வைத்திருந்தாலும் அந்த வயது போன மூதாளர்கள் தமது மனதிற்கோ விருப்பத்திற்கோ ஏற்றவாறு எதையும் புலம்பெயர் நாடுகளில் அவர்கள் அனுபவிக்கவில்லை என்பதையும் பல மூத்த பெற்றோர்களிடம் பெற்றுக் கொண்ட கருத்துக்களின் அடிப்படையில் தனது ஆய்வினை திருமதி.ர.மாலதி அவர்கள் சொல்லியிருந்தார். கடசியில் அவர் முத்தவர்களின் பேரில் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். புலம் பெயர் மண்ணில் இன்று கடவுள் வழிபாடாக பல கோயில்கள் அதிகமாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதில் கவனம் நல் உள்ளங்கள் எம்மை உலகிற்கு தந்து தம்மை உருக்கி எம்மைச் செதுக்கிய பெற்றோர்களுக்கும் மூதாளர்களுக்கும் ஒரு இடத்தை நிரந்தரமாக பெற்றோ கட்டியோ ஏன் கொடுக்கக் கூடாது என்று கேட்டிருந்தார். ( குழந்தையுடன் பழகிப்பார் நீ குழந்தையாய் இருந்து என்ன செய்திருப்பாய் என்று தெரிந்து கொள்ளுவாய். முதியவர்களுடன் பழகிப்பார் நாம் எப்படி இருக்கப்போகின்றோம் என்று தெரியும் என்ற உண்மைத்தத்துவம் தான் நினைவில் வந்தது)

” தமிழ்த் தேசியப்போராட்டமும் இதயபூமி என்னும் மணலாறும் என்ற விடயத்தை இணைய பல்கலைக்கழக பொறுப்பாளர் விரிவுரையாளரும் கலாநிதியுமாகிய திரு. சி தனராஐh அவர்கள் ஆய்வு செய்து வழங்கியிருந்தார். அவரின் ஆய்வின் உரைக்கு முன்னராக திரையில் சில காட்சிகள் காட்டியிருந்தனர். எமது தேச ஆண்கள் பெண்கள் இளையவர்களிடம் மணலாறு என்றால் என்ன என்ற கேள்வியை தொலைக்காட்சியினர் கேட்டிருந்தார். அதில் ஆறு பேர் மட்டுமே மணலாறு தமிழீழத்தின் இதயம் என்பதையும் சிங்கள ஆக்கிமிப்பு செய்த தமிழர் நிலம் என்பதை கூறியிருந்தார். மிகுதி பேர் ஏதேதோ காரணங்களை செல்லியிருந்தார்கள் சிலர் ( வயது 30- 40 யும் தாண்டியவர்கள் அப்படியொரு இடம் இருக்கின்றதா என்று கூட கேட்டிருந்தமை மிகுந்த வேதனையை தந்திருந்தது. ( இது எமது அரசியல் செய்பவர்களும் பரப்புரைகள் செய்பவர்களும் கல்வியை தமிழர் வரலாறுகளை சொல்லித்தருபவர்களும், ஆர்வலர்களும் இனியாவது அவசர கவனத்திற்கு கொண்டு வரவேண்டியதாகின்றது.) இதயபூமி மணலாற்றைப்பற்றியும் அந்த மண்ணின் பெருமைகள் பற்றியும் யானைகட்டிய அரியாத்தையின் வீரம் முதற்கொண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வரையும் எத்தனை ஆhப்ணிப்புகளையும் இந்த மண்ணின் கனி வளங்களையும் இன்னும் பல்வேறு கற்கால கதைகளையும் உதாரணங்களையும் ஆதாரங்களுடன் தமிழீழத்தின் இதயம் மணலாறுப் பிரதேசம் எப்படி சிங்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு நிற்பதையும் விளக்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கொட்டும் முரசொலியுடன் தமிழீழத் தேசியத்தலைவர் படத்தை தாங்கி “தூங்கும் பறையை தட்டியெழுப்புவோம்” என்ற பாடலுக்கு எழுச்சி நடனம் வழங்கினர்.

தொடர்ந்து மதிய உணவாக சிற்றுண்டி வழங்கப்பட்டது.

மீண்டும் ஆய்வுகள் ஆரம்பமரியது ” ஈரநிலத்தை எதிர்பார்த்து கவிதை தொகுப்பும் அதில் உள்ள உள்ளீடுகளும் உத்திகளும் பற்றி திருவாளர் இரா இரத்தினகுமார் அவர்கள் வழங்கியிருந்தார். தாயகக் கவிஞர் மன்னார் பெனில் அவர்களின் இரண்டாவது கவிதை தொகுப்பான ஈரநிலத்தை எதிர்பார்த்து என்ற கவிதையைப்பற்றிய ஆய்வினையும் ஒவ்வொரு தமிழனும் படித்து உணர்வேற்றிக் கொள்ள வேண்டிய கவிதைத் தொகுப்பு என்பதை அவரின் விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆய்வாளரும் மற்றும் கலாநிதி தனராஐh அவர்களும் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர் . கவிஞர் மன்னார் பெனில் அவர்கள் ஓர் மாற்றுத் திறனாளியாக இருந்த போதும் அந்த உபாதைகளுக்கு மத்தியிலும் அற்புதமான கவிதைகளை எழுதிவருகின்றார் என்பதையும் அவரின் கவிதைகளை புத்தகங்களாக்கி அனைத்து மக்களிடமும் அவரின் கவிதைகளை கொண்டு செல்லும் செயற்பாட்டை இனி தாம் முன்னெடுக்கப்போவதாக கூறியிருந்தார்கள்.

” தமிழனின் பண்பாட்டு அறிவியலும் வெளிநாட்டவரின் கவனயீர்ப்பும் என்ற தலைப்பில் திருவாட்டி இராசையா சிறீப்பிரியா அவர்கள் தனது ஆய்வின் மூலம் நிகழ்கால நிகழ்வை தந்திருந்தார் என்பதை விட சீறிப்பாய்ந்து சிந்திக்கவைத்தார் என்றே சொல்லலாம். ஓன்றா இரண்டா உலகத் தொழில் நுட்பத்தின் உச்சத்தின் ஒன்றாக இருக்கின்ற நாசா கூட இன்று பல்லாயிரம் கோடி பணத்தை செலவழித்து விண்ணைத்தாண்டி கண்டுபிடிப்பவைகளை எமது மூத்த தமிழ் பரம்பரையினர் ஆதியிலேயே கண்டு பிடித்து சொல்லிவிட்டார்கள் என்பதையும், தமிழர்களின் வாழ்வில் உள்ள கலாசார பண்பாடு செயற்பாடுகளின் காரணங்களை இன்றைய விஞ்ஞான மருத்து ரீதியாக அது ஆராயப்பட்டு சர்வதேசமே தமிழர்களின் திறனைக் கண்டு வியப்பதோடு நின்றுவிடாது அதனை தாமும் இன்று வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டதையும் தமிழர்கள் நாங்கள் பழமைபேசி அதிலிருந்து விலகிக் கொள்வதையும் சுட்டிக்காட்டியிருந்தார். காலைமுதல் பல ஆய்வுகளை காதாலும் கேட்டும் கண்ணால் பார்த்தும் சற்றுக்களைப்படைந்திருந்தவர்கள் வார்த்தைகளால் சீறிப்பாய்ந்த ஆய்வுக்கருத்துக்களால் நிமிர்ந்து இருக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.

‘ வரலாற்றுப்போக்கில் பெண்களில் எழுச்சியும் குமுகாய மனப்பாங்கு மாற்றங்களும் பற்றி திருவாட்டி புஸ்பகுணபாலசிங்கம் nஐயராணி அவர்கள் பெண்களுக்கே உரிய பக்குவத்துடனும் பல பகுத்தறிவான நடைமுறைகருத்துக்களை சொல்லியிருந்தார். தாயகத்தில் தாய்மொழி மூலம் பல்கலைக்கழகம் சென்ற தான் புலத்தில் என்ன செய்யப்போகின்றேன் என்ற மனஉழைச்சலுக்கு சென்ற போது புலத்தில் பிரான்சில் தமிழ்ச்சோலையின் கல்விச்சேவையும் அதன்ஓர் அங்க செயற்பாடான பல்கலைக்கழக படிப்பிற்கான செயற்பாடும் தனக்கு பெரும் நிறைவை தந்துள்ளது என்றும் தாயகத்தில் வெட்டிவெட்டி மொட்டையாய் போன தனது தாய் மொழிக்கத்தி இங்கு வந்து பட்டைதீட்டப்பட்டு எதையும் தாய் மொழியால் வெட்டியெறியும் நிலையில் தான் வளர்ந்து நின்று கொண்டிருப்பதையும,; உலகப்பந்தில் பெண்களின் பங்கு உயர்வானது என்றும் இன்றைய நவீன உலகில் ஆண் பெண் சமமமே என்தற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் தமிழீழ விடுதலைக்காக போராடிய பெண்கள் என்பது அவர்களை சமமாக உருவாக்கி உலகத்திற்கு தெரியவைத்தவர் தமிழீழ தேசியத் தலைவர் தான் என்பதையும் தெரிவிக்கப்பட்டது.

” புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் விழுமியங்களை தாங்கி நிற்கும் எண்ணப்பாடுகள் செயன்முனைவுகளும் பற்றி திருவாட்டி தயாபரி கண்ணதாசன் அவர்கள் தனது ஆய்வுகளை தந்திருந்தார்.

புலம்பெயர்ந்த மக்கள் நாம் பல நிகழ்வுகளை செய்கின்றோம். அதில் முக்கியமாக தமிழீழ தேசிய மாவீரர்நாள், மே 18 தமிழின அழிப்பு நாள், கறுப்பு சூலை 23 ம் நாளளும் ஏனைய மாவீரர்களின் நினைவு நாட்களும் நிகழ்வுகளும் எமது இனத்தின் வாழ்வையும், வாழும் நாடுகளில் நாம் எதற்காக வந்தோம் போன்ற எமது எதிர்கால சந்தியின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக எமது செயற்பாடுகள் ஒரே நேரிய கோட்டில் ஒற்றுமையாக செய்யப்பட வேண்டும் இனத்தின் ஒற்றுமையை சீர் குலைக்கின்ற சக்திகளுக்கு இடமளிக்காது செயற்பட வேண்டுமென்ற தொனியில் தனது ஆய்வுக்கருத்துரைகளை தந்திருந்தார்.

இறுதி ஆய்வுக்கட்டுரையை ” இலக்கியவாதியும், சிறுகதை எழுத்தாளர் நாடக திரைப்படக்கலைஞர் தமிழீழ மண்ணின் காலம் தந்த எழுத்தாளன் செங்கை ஆழியான் அவர்கள் பற்றி எழுத்துகளையும் நினைவலைகளையும் திருவாட்டி. திருச்செல்வம் உதயராணி அவர்கள் வழங்கியிருந்தார்.

இந்த ஆய்வுகள் தேடல்கள் யாவும் எழுத்து வடிவில் நூலாக விட்டதோடு அவற்றை எமது அடுத்த தலைமுறையினர் இன்னும் சுலபமாக புரிந்து கொள்ள ஏதுவாக பிரெஞ்சுமொழியிலும் எழுதியிருப்பது முத்தாய்ப்பாய் இருந்தது. எமது தேவைகள் ஆதங்கங்கள் எம்முடனே நின்று போய்விடாது அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகின்றது. இதைத்தான் அன்றும் இன்றும் போராடி சுதந்திரமடைந்த நாடுகளும் வல்லரசுகளும் தமது அடுத்த சந்ததியினருக்கு பாடப்புத்தகங்களாகவும் கதைகளாகவும் காட்சிகளாகவும், திரைப்படங்களாகவும் வருடம்தோறும் நினைவு கூரும் நிகழ்வுகளாகவும் செய்துவருகின்றன. அதைத்தானே நாமும் செய்தல் வேண்டும்.

இறுதி நிகழ்வுகளாக தியாகதீபம் நினைவாக கவிதையும் அதற்கான அபிநயமும் நடைபெற்றது கவிதையை இரா. சதீஸ்வரன் எழுதிகுரலும் வழங்கியிருந்தார்.

“தமிழே தமிழே” என்ற பாடலுக்கு வழங்கிய நடனத்தை தொடர்ந்து இளைய தலைமுறை செல்வன். நவநீதன் நிந்துலன், செல்வன். இராசாளி இளவரசன் செல்வன். தவராசா ரஞ்சித் ஆகியோர் வழங்கினர். இன்றைய ஆய்வரங்கிற்கு பல இளையவர்கள் பெண்கள் ஆண்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு இன்னும் சுலபமாக விளங்கிக் கொள்ளும் வகையில் பிரெஞ்சு மொழியில் விளக்கங்களைக் கொடுத்திருந்தனர்.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற உறுதிப்பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற உரக்க குரலுடன் இனிதே ஆய்வரங்கம் மாலை 6.00 மணிக்கு நிறைவு கண்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்