அக்கரை கடற்கரை சுற்றுலா மையத்தினை அகற்றக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம்!

காலாச்சார சீரழிவின் மையமாக உருவெடுத்திருக்கும் அக்கரை கடற்கரை சுற்றுலா மையத்தினை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.

இடைக்காடு அக்கரை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையம் கலாச்சார சீரழிவின் அமைவிடமாக உருவெடுத்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்துவரும் நிலையில் அதனை அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை வைத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் நீர் ஆகீரமின்றி சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

கலாச்சார சீரழிவில் ஈடுபடுவோரின் இடமாக உருவெடுத்திருக்கும் இச் சுற்றுலா மையத்தை அகற்ற வேண்டும் அல்லது தமது உயிர் போகவேண்டும் என்ற உறுதியுடன் கடந்த திங்கள் அன்று மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பட்டினிப் போராட்டம் 3 ஆவது நாளாகத் தொடர்ந்து வருகின்றது. கைக்குழந்தைகளுடனும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அக்கரை கடற்கரை சுற்றுலா மையத்தினால் இப்பகுதி பல வகையாகன கலாசார சீரழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தை கடந்து செல்லும் எமது பெண் பிள்ளைகள் தனியே சென்று வரமுடியாதளவிற்கு மிக மோசமாகவுளிளது. அத்துடன் தமது பிள்ளைகளும் சீரழிவுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கும் இம் மக்கள் இவ் உல்லாச மையத்தினை அகற்றும் கோரிக்கையினை முன்வைத்து சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இது குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் அவர்களுடனான சந்திப்பின் போது தெரியப்படுத்தியும் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லையென இம் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

செய்தி மற்றும் படங்கள் ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்!

About இலக்கியன்

மறுமொழி இடவும்