ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைனை,சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பு தனி அறையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் தாமதமடைவதாக ஹுசைன், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பத்தில் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

