நாடாளுமன்றத்தில் வியாளேந்திரனைத் தாக்க முற்பட்ட சிறீதரன்!

மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக புளொட் அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வாக்களிக்கவில்லையென தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் காரசாரமாத் திட்டியதுடன், தாக்கவும் முயற்சித்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியைத் தவிர மற்றைய கட்சிகள் எவையும் ஆதரவாக வாக்களிக்கவில்லை.

இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வாக்களிக்கவில்லையென சிறிதரன் காரசாரமாகத் திட்டினார். இதனிடையே இரண்டுபேருக்குமிடையே உருவான வாய்த்தரக்கம் இறுதியில் கைகலப்பில் ஆரம்பித்தாகவும், இதனையடுத்து சக உறுப்பினர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தற்போது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன்
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா

About இலக்கியன்

மறுமொழி இடவும்