சீனன்குடா எண்ணெய்க் குதத்திற்கு அருகாமையில் உள்ள கிராமத்து கிணறுகளில் எண்ணெய்க் கசிவு!

திருகோணமலை சீனன்குடா பகுதியில் எண்ணெய்க் குதங்கள் அமைக்கப்பட்டுள்ளதன் விளைவாக அருகாமையில் உள்ள கிராமத்து கிணறுகளில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கைத் தீவை ஆட்சிசெய்த காலத்தில் பிரித்தானிய அரசால் 1930 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்ட எண்ணெய்க் குதங்களே காலத்திற்கு காலம் சீரமைக்கப்பட்டு தொடர் பயன்பாட்டில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் உதவி : Ramanan Thevarajah

About இலக்கியன்

மறுமொழி இடவும்