முல்லைத்தீவு கிணற்றினுள் விழுந்த யானை! நடந்தது என்னவென்று தெரியுமா?

முல்லைத்தீவில் அலியன் எனப்படும் தனி யானை ஒன்று கிணற்றினுள் தவறுதலாக விழுந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இந்தச் சம்பவம் முள்ளியவளை, களிக்காடு 11ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முலைத்தீவில் கிணற்றை எட்டிப்பார்த்த அலியன்; தலைகீழாக வீழ்ந்ததாகத் தகவல்!

குறித்த அலியன் யானை நேற்றைய தினம் இரவு வேளையில் அப்பகுதியிலுள்ள கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என தெரிவித்த மக்கள், குறித்த கிணறு மேற் கட்டுக்கள் இன்றிக் காணப்படுவதே யானை இவ்வாறு விழுந்தமைக்கான காரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

முலைத்தீவில் கிணற்றை எட்டிப்பார்த்த அலியன்; தலைகீழாக வீழ்ந்ததாகத் தகவல்!

குறித்த யானை களிக்காடு ,கோடாலிக்கல்லு, குஞ்சுக்கோடாலிக்கல்லு, பகுதிகளில் சுற்றித்திரிந்ததாகவும் மக்களிடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது, குறித்த யானையை மீட்பதற்கான நடவடிக்கையை வன ஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*