சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகள் பட்டியலை டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களின் பதவியை பறித்து, புதிய நிர்வாகிகளுக்கு டி.டி.வி.தினகரன் பதவி வழங்கி வருகிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
சைதாப்பேட்டை பகுதி மாணவர் அணி செயலாளர் கபீர், அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரராகவன், வட்டச் செயலாளர் ஜி.கந்தன், சேக்அலி, மயிலாப்பூர் அறிவழகன், பாபு, ஆர். என்.சேகர், துரைக்கண்ணு, குணா, விருகை குணசேகரன், எம்.பி.குமார், சதீஸ் குமார், கராத்தே மகேஷ், ராமமூர்த்தி, மூர்த்தி, கோவிந்தன், எம்.ஜி.ஆர்.நகர் பாஸ்கர் ஆகியோரது பதவி பறிக்கப்படுகிறது.
அடையார் இமாம், ஆறுமுகம், முல்லை செல்வம், எம்.ஏ.மூர்த்தி, சம்பத் குமார், குப்புசாமி, ராஜா, ஜோதீஸ்வரன், மணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
சைதை பகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக சைதை சாரதி இளைஞர் அணி செயலாளராக கண்ணன், மாணவரணிக்கு வசந்த், அண்ணா தொழிற்சங்கத்துக்கு தயாளன், அமைப்புசாரா ஓட்டுனர் அணிக்கு பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சைதை 172-வது வட்டச் செயலாளராக ஈகை குப்பன், 174-வது வார்டுக்கு வீரராகவன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர், தாம்பரம், பரங்கிமலை, கோவிலம்பாக்கம், மூவரசம்பட்டு, பொழிச்சலூர் நிர்வாகிகள் பதவி பறிக்கப்பட்டு புதியவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சி கிழக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், நீலகிரி, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளும் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

