திம்பிலி பகுதியில் சட்டத்திற்கு முரணாக மணல் அகழ்வு. மக்கள் முறைப்பாடு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள திம்பிலிப்பகுதியில் சட்டத்திற்கு முரணான மண்ணகழ்வு இடம்பெறுவதாக திம்பிலிவாழ் மக்கள் முறையிட்டுள்ளனர்.

குறித்த சட்டமுரண் மணல் அகழ்வு தொடர்பாக தொடர்புடைய அரசலுவலர்களுக்கும் காவல்துறையினர்க்கும் ஏற்கனவே பலதடவைகள் முறையிட்டதாகவும் அவை தொடர்பில் இது வரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான முறைப்பாடொன்று வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டநிலையில் கடந்த 2017.09.21 அன்று குறித்த இடங்களை ரவிகரன் பார்வையிட்டுள்ளார்.

இது தொடர்பில் ரவிகரன் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில்,

கடந்த 2017.09.20அன்று திம்பிலிவாழ் மக்கள் குறித்த முறைப்பாட்டை என்னிடம் முன்வைத்தனர். மறுநாளே குறித்த இடங்களுக்குச்சென்று சட்டத்திற்கு முரணாக மணல் எடுக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு உறுதிப்படுத்தினேன்.
இது தொடர்பாக உரிய இடங்களுக்கு கொண்டு சென்று சட்டத்திற்கு முரணான மணல் அகழ்வினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என மக்களிடம் கூறி குறித்த களச்சந்திப்பை நிறைவுசெய்தேன் எனத்தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்