மாந்தை சந்தியில் விபத்து….இளைஞம் மரணம்!

மன்னார்-யாழ் பிரதான வீதி மாந்தை சந்தியில் நேற்று சனிக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
திருக்கேதீஸ்வரத்தில் இருந்து வந்த 4 இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது,மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொரியுடன் மோதி விபத்து நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூவர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த மூன்று இளைஞர்களும் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்