கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பயணிகள் வவுனியாவில் போராட்டம்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி காலை 5.40 மணிக்கு கடுகதி புகையிரதத்தில் பயணித்த பயணிகள் வவுனியாவிற்கு அப்பால் புகையிரதம் செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இன்று (சனிக்கிழமை) காலை 5.40 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ் நோக்கி செல்லும் கடுகதி புகையிரதத்தில் 1500 ரூபா பயணச்சீட்டு பெற்று பயணிகள் தமது பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் பொல்காவெல புகையிரத நிலையத்திற்கு அப்பால் புகையிரதம் தடம் புரண்டதாக தெரிவித்து அங்கு இரண்டு மணிநேரம் காத்திருந்த பயணிகளை பேரூந்தில் ஏற்றி பொதுபெர புகையிரத நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்தும் புகையிரதம் இல்லாமையினால் புகையிரத நிலைய அதிகாரிகளுடன் முரண்பட்டதையடுத்து புகையிரதம் ஒன்றில் மாகோ வரை பயணிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும் மாகோவில் இருந்து புகையிரதம் வழங்கப்படாமையினால் யாழ்ப்பாணத்தில் இரந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தினை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்தில் வழிமறிக்கப்பட்ட புகையிரத்தில் இருந்த பயணிகளை ஏற்றி கொழும்புக்கு அனுப்பிய புகையிரத நிலைய அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்தினை மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளை அனுப்பியுள்ளனர்.

இந் நிலையில் வவுனியாவை சுமார் 5.30 மணியளவில் வந்தடைந்த புகையிரத்தினை வவுனியாவிற்கு அப்பால் அனுப்ப முடியாது என வவுனியா புகையிரத நிலைய அதிபர் தெரிவித்ததையடுத்து பயணிகள் மீண்டம் வவுனியா புகையிரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பயணிகளுடன் சமரசம் செய்ததுடன் பேரூந்து வசதியொன்றினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும் பயணிகள் அதில் பயணிக்காது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிறிதொரு புகையிரத்தில் தமது பயணத்தினை இரவு 6.45 மணியளவில் மேற்கொண்டனர்.

காலை 5.40 மணிக்கு கடுகதி புகையிரத்தில் பயணிப்பதற்காக ஆரம்பித்த பயணம் சாதாரண புகையிரதத்தில் சென்று முடிந்ததையிட்டு பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்