வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மீளத் திறக்கப்படும்?

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மீளத் திறப்பது குறித்து பிரதமருடன் விரைவில் கலந்துரையாடி புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளர்.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்றையதினம் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக நானூறு ஏக்கர் காணி பொதுமக்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்டதாகவும் இந்தக் காணிகள் முழுவதும் இப் பகுதியில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு சொந்தமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொழிற்சாலை அமைக்கப்பட்டால், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவே குறித்த காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் யுத்தம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளர்h.

தற்போது. தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டிய முழு பங்களிப்பை கொரியா நிறுவனம் ஒன்று செய்வதற்கு தயாராக உள்ளது எனவும் குறித்த கொரியா நிறுவனம் சுதந்திரமாக செய்வதற்கு சந்தப்பம் வழங்கப்பட்டால், 2018ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்பதாக தொழிற்சாலையை புனரமைப்பு செய்து இயங்க நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்பது தமது நம்பிக்கையாக உள்ளது எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்