தியாகி திலீபனின் கனவுகளை புதைத்து விட்டு திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் துரோகி சம்பந்தன்!

தியாகதீபம் லெப்.கேணல்திலீபனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் இன்று(24) அம்பாறை மாவட்டம் கல்முனையில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ்வஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட இரா.சம்பந்தன், தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அகிம்சைப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனாலும் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் போராட்டம் வித்தியாசமானது.

இந்திய ஏகாதிபத்தியத்திற்காக போராடி தனது உயிரை மாய்த்துக்கொண்டார் எனவும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்