கேப்பாபுலவிலிருந்து ராணுவத்தினர் வெளியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதாக அரசாங்க அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, தற்போது அங்கிருந்து இராணுவத்தினர் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

64பேருக்குச் சொந்தமான 111 ஏக்கர்நிலப்பரப்பை விடுவிப்பதாகத் தெரிவித்து வந்த அரசாங்கம் கடந்த காலங்களில் மக்களுக்குச் சொந்தமில்லாத காணிகளையே இதுவரை விடுவித்து வந்தது.

இந்நிலையில் குறித்த மக்கள் முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே குறித்த மக்களுக்குச் சொந்தமான காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியபின்னர் குறித்த நிலங்கள் மக்களிடம் கையளிக்கப்படும் என அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்