திலீபனின் 30ம் ஆண்டு நினைவில் எழுச்சி கொண்ட லண்டன் தமிழர்கள் – 100க்கும் அதிகமானோர் இரத்த தானம்!

தியாக தீபம் திலீபனின் 30ம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநககர் லண்டன் எழுச்சி கொண்டுள்ளது.

லண்டனின் பல பகுதிகளில்உம் வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள், வீடுகள் மட்டுமன்றி ஒரு சில தமிழ் பாடசாலைகளிலும் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இதே வேளை தியாக தீபம் திலீபனின் தியாகத்திற்கு மதிப்பளித்து அவர் உண்ணா நோன்பிருந்த அந்த புனித நாட்களில் தாமும் பிறருக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்ற உயரிய நோக்கோடு சிறந்த தானமான இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் இறங்கியுள்ளனர்.

கடந்த வாரம் மட்டும் சுமார் 48 பேர் இதத்ததானம் செய்துள்ள நிலையில் இன்றும் இரத்ததானம் வழங்கவென 63 பேருக்கு மேள் தமது பெயர்களை பதிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது. இவ் இரத்ததான நிகழ்வு இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை எட்ஜ்டெயார் கொமியூனிட்டி கொஸ்பிட்டலில் (Edgware Community Hospital, Blood Donor Centre, Burnt Oak Broadway, Edgware HA8 0AD) இடம்பெற உள்ளது.

இது வரை பெயர் வழங்காதவர்களும் ஆர்வமும், உதவிடும் மனமும் இருப்பவர் நேரடியாக அங்கு சென்று தியாகதீபம் திலீபன் நினைவாக இரத்தம் வழங்குவதாக தெரிவித்து உங்கள் இரத்த தானத்தை செய்து கொள்ளலாம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்