தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

தொடர்ந்து பறிபோகும் தமிழர் உரிமையினை மீட்கும் விதமாக ’தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்’ அய்யா வீரசந்தானம் அவர்களின் நினைவு மேடையில் நேற்று (23.09.17) சென்னை தியாகராயர் நகர், முத்துரங்கன் சாலையில் மே பதினேழு இயக்கமும் தமிழர் விடியல் கட்சியும் இணைந்து நடத்தியது.

இந்நிகழ்வை மே 17 இயக்க தோழர் கொண்டல் ஒருங்கிணைத்தார். முதலில் தமிழின உரிமை முழக்கத்தை தங்களது பறையின் மூலமாக புத்தர் கலைக்குழு தோழர்கள் முழங்கி நிகழ்வை தொடக்கிவைத்தார்கள். அடுத்ததாக வந்திருந்தவர்களை வரவேற்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீண் வரவேற்ப்புறை நிகழ்த்தினார். தொடக்கவுரையை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் நிகழ்த்தினார். அடுத்ததாக அரசின் பொய் குற்றச்சாட்டில் கைதாகி சிறைமீண்ட தோழர்கள் தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன் மற்றும் இறுதியாக மே 17 இயகக்த்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அகியோர் தமிழின உரிமைமீட்பு முழக்கத்தையும், அதற்கான செயல்திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கி பேசினார்கள். காவல்துறையின் நெருக்கடியின் காரணமாக நன்றியுரை சொல்லமுடியாமல் போய்விட்டது.

இதற்கிடையில் மே 17 இயக்கத்தின் அலைபேசி செயலியையும் (APP), மே 17 இயக்கத்தின் மாதந்திர பத்திரிக்கையான ’மே 17 இயக்கக் குரலை’யும் தோழர்கள் மூவரும் வெளிட்டார்கள். சிறைமீண்ட தோழர்களுக்கு பல்வேறு கட்சி மற்றும் இயக்கத்தோழர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். நடிகர் மயில்சாமி அவர்கள் மேடைக்கே வந்து சிறைமீண்ட தோழர்களுக்கு பூச்செண்டுகொடுத்து பொன்னாடை போத்தி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த தோழர்கள், தமிழின உணர்வாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

தோழர்கள் இந்த இணைப்பில் இருந்து தங்களின் அலைபேசியில் மே 17 இயக்க செயலியை நிறுவி பயன்படுத்தலாம் :

https://play.google.com/store/apps/details?id=com.may17iyakkam.android

 

About இலக்கியன்

மறுமொழி இடவும்