புதிய அரசியல் தீர்வு விடுதலைப்போராட்டத்தை முடக்குகின்றது?

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏறத்தாழ 70 வருடங்களாக தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் கோரிக்கைகளை வெறும் ஒன்றே கால் பக்கத்துக்குள் அடக்கியிருக்கின்றதென விமர்சனம் செய்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினே;வரன்.

ஊடகவியலாளர்களால் மின்னஞ்சல் வழி விடுக்கப்பட்ட கேள்விகளிற்கு பதிலளித்துள்ள அவர் கூட்டமைப்பு வேறு அறிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளதே தவிர திடமாகத் தமக்குவேண்டியவற்றைக் கூறத் தவறியுள்ளது. வடமாகாணசபையும் தமிழ் மக்கள் பேரவையும் போதுமான விபரங்களுடன் தமது அறிக்கைகளைச்சமர்ப்பித்திருந்தன எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் எனக் கூறப்படுகின்றதே தவிர என்னென்ன அதிகாரங்கள் மாநிலத்துக்கு ஒதுக்கப்படவேண்டும் என்பன பரிந்துரை செய்யப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் இவ் இடைக்கால அறிக்கையானது தமிழரின் இனப் பிரச்சனை தொடர்பான பயணத்தினை பின்னோக்கி நகர்த்தியுள்ளதாகவே கருதலாமெனவும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு

1. உத்தேசஅரசியலமைப்புதிருத்தத்துக்கான இடைக்காலஅறிக்கைவெளிவந்துள்ளநிலையில் தமிழர் தரப்பிலிருந்துபரவலானஅதிருப்தியும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளதைஅவதானிக்கக் கூடியதாகஉள்ளது. இதுதொடர்பில் தங்களதுநிலைப்பாடுஎன்ன?

பதில் – முழுமையாககுறித்தஆவணத்தைப் பரிசீலிக்கஎனக்குநேரம் போதவில்லை. மருத்துவமனைக்குச் செல்லும் தறுவாயில் எனதுமேலெழுந்தகருத்துக்களைவெளியிடவிரும்புகின்றேன்.
எனதுஅவதானம் பின்வருமாறு –
ஒருவர் நோயுற்றிருந்தால் அவரின் அந்தநோய் என்னஎன்றுமுதலில் அறிந்துகொள்ளவேண்டும். அதன்பின் அந்தநோய்க்குஎவ்வாறானசிகிச்சைஅளிக்கவேண்டும் என்றுஆராயவேண்டும். அந்தஆராய்வின் முடிவில் சிகிச்சைஆரம்பிக்கப்பட்டுநோயைத் தீர்க்கமுயற்சிக்கவேண்டும்.

நாம் இப்போதுஎமதுநோயைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லைஎன்பதேஎனதுகருத்து. நோயைப் புரிந்துகொள்ளாதுஒவ்வொருவரும் பனடொல் கொடுப்போம்,கசாயம் கொடுப்போம்,பனடீன் கொடுப்போம்,எண்ணைதேய்ப்போம் என்றுகொண்டிருக்கின்றோம். நோயைப் புரிந்துகொள்ளாதுமருந்துகளைப் பற்றியசர்ச்சையில் ஈடுபட்டுள்ளோம். நோயைப் புரிந்துகொள்ளநோயின் சரித்திரம் மிகஅவசியம். எவ்வாறானபின்புலம் இன்றையநோயைஏற்படுத்தியதுஎன்றுஅறிந்தால்த் தான் உரியசிகிச்சையைப் பரிந்துரைக்கலாம். நோயைப் புரிந்துகொள்ளாதுசிகிச்சையில் நாம் ஈடுபட்டுள்ளோம் என்பதேஎனதுஅவதானம்.

இடைக்காலஅறிக்கைநோயைஅறிந்ததாகவோ,தீர்க்கப் போதுமானதாகவோதென்படவில்லை. நோயைஅறியாதசிகிச்சைதோல்வியில் முடியும்.

இடைக்காலஅறிக்கைதமிழர்களுக்குமிகுந்தஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்பதுதிண்ணம். சிங்களபௌத்தமேலாதிக்கத்தினைஉறுதிப்படுத்துவதாகவேகுறித்தஅறிக்கைஉள்ளது. எதனைப் புறக்கணித்துநாம் எழுபதுவருடங்களுக்குமேலாகப் போராடிவந்தோமோஅதனைவலியுறுத்துவதாகவேஅறிக்கைஅமைந்துள்ளது. அதனால்த் தான் நான் கூறினேன் நோயைஅறியாமல் மருந்துபற்றிசம்பா~ணைகள் நடந்துள்ளனஎன்று. நோய் என்றுநான் குறிப்பிடுவதுஎமக்கு இனப் பிரச்சனைஏற்படுத்துவதற்குமுக்கியகாரணமாக இருந்ததையே.சிங்களத் தலைவர்கள் அரசியல் அதிகாரத்தைத் தம்வசம் எடுத்துக் கொண்டுதாம் செய்ததேசரியென்றஅடிப்படையில் இதுவரைகாலமும் நடந்துகொண்டதேஎமதுஅரசியல் நோய்க்கு மூல காரணம்.

குறித்ததலைவர்களின் இதுவரையிலானசெயற்பாடும் நோக்கும் கண்டிக்கப்பட்டுஅதற்கானமாற்றத்தினைநாம் முன் வைக்கமுன்வரவேண்டும். அப்போதுதான் நோய்க்குநாம் பரிகாரம் தேடலாம்.

ஒற்றைஆட்சியினைநிராகரித்துதமக்குரியஅரசியல் தீர்வாகசம~;டிக் கோரிக்கையினைதமிழர்கள் முன்வைத்துள்ளநிலையில் தொடர்ந்தும் ஒற்றைஆட்சிமுறைமையினைதக்கவைக்கும் பொருட்டுவார்த்தைப் பிரயோகங்களில் ஏமாற்றமுற்பட்டுள்ளமைஅருவருப்பைஏற்படுத்துகின்றது. ஒருநாட்டினுடையஆட்சிக் கட்டமைப்பினைகுறிக்கப் பயன்படுத்தப்படும் சர்வதேசரீதியில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியஒருபொருத்தமானவார்த்தையினைப் பயன்படுத்தாது“ஏகியரட”என்கின்றசிங்களசொற்பதத்தினைபயன்படுத்தியிருக்கின்றார்கள். “எக்சத்”என்றபதத்தைப் பாவிக்காது“ஏகியரட”என்று கூறியமைஅறிக்கைஆக்கியோரின் கபடத் தனத்தைவெளிக்காட்டுகின்றன. தமிழ் மக்களின் சுயநிர்ணயஉரிமைஅங்கீகரிக்கப்பட்டு இணைந்தவடக்குகிழக்கில் சம~;டி அடிப்படையிலானஅதிகாரம் பகிரப்படவேண்டும் என்கின்றதமிழ் மக்களின் கோரிக்கை இவ் இடைக்காலஅறிக்கையில் முற்றாகநிராகரிக்கப்பட்டுள்ளதாகவேகருதமுடியும்.

2. தமிழ்த் தேசிய கூட்டமைப்புதேர்தல் காலத்தில் வாக்குறுதிஅளித்தவாறுவடக்குகிழக்கு இணைப்புபற்றியும்ஐக்கிய இலங்கைஃ மாகாணங்களின் ஒன்றிணைப்புபற்றியும் பின்னிணைப்பில் வலியுறுத்தியுள்ளதேஅதுபற்றிதாங்கள் என்னநினைக்கிறீர்கள்?

அறிக்கையின் ஆங்கிலப் பிரதியினைப் பார்த்தீர்களானால் தமிழ்த்தேசிய கூட்டமைப்புஏறத்தாழ 70 வருடங்களாகதமதுஉரிமைகளுக்காகபோராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் கோரிக்கைகளைவெறும் ஒன்றேகால் பக்கத்துக்குள் அடக்கியிருக்கின்றதுஎன்பதுதெரியவருகின்றது. வேறுஅறிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளதேதவிரதிடமாகத் தமக்குவேண்டியவற்றைக் கூறத் தவறியுள்ளது. வடமாகாணசபையும் தமிழ் மக்கள் பேரவையும் போதுமானவிபரங்களுடன் தமதுஅறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தன.

மத்தியஅரசுக்கும் மாநிலத்துக்கும் இடையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் எனக் கூறப்படுகின்றதேதவிரஎன்னென்னஅதிகாரங்கள் மாநிலத்துக்குஒதுக்கப்படவேண்டும் என்பனபரிந்துரைசெய்யப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் இவ் இடைக்காலஅறிக்கையானதுதமிழரின் இனப் பிரச்சனைதொடர்பானபயணத்தினைபின்னோக்கிநகர்த்தியுள்ளதாகவேகருதலாம்.

3. இவ் இடைக்காலஅறிக்கைக்குநீங்கள் ஆதரவு வழங்குவீர்களா?

நோய்க்குமருந்துகொடுக்காவிட்டால் நோய் தீராது. தொடரப் போகும் நோய்க்கு ஆதரவு வழங்கச் சொல்கிறீர்களா?அரைகுறைத் தீர்வுஒருபோதும் நோய்க்குமருந்தாகாது. தொடர்ந்துபோராடவேண்டியநிர்ப்பந்தத்தையே இந்த இடைக்காலஅறிக்கைஎமக்குநல்கியுள்ளதென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்