தமிழீழ மண்ணின் தியாக செம்மல் புலிவீரன் திலீபன்! எஸ்.நிதர்ஷன்

தமிழர் விடுதலைப் போராட்டத்திலே யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் பங்கு அதிகம். அவர்கள் போராட்டத்திற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கின்றார்கள்.

தமிழ் மாணவர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டிவிட்ட மொழி இன மத வேறுபாடுகள் தமிழ் மாணவர்களை தரப்படுத்தல் என்ற போர்வைக்குள் தள்ளி மாணவர்களை கல்வியில் பின்னடைய வைத்தது. இதன் காரணமாக ஈழ தேசத்திலே கல்லூரி மாணவர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போராடப் புறப்பட்டார்கள்.

அவர்களில் ஒருவர் தான் தீலிபன். இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரைக் கொண்டவர். யாழ் இந்துக் கல்லூரியிலே மாணவனாக இருந்து மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியும் அந்த மருத்துவ பீட வாழ்க்கையைத் துறந்து தமிழின விடுதலைக்காக தன்னைப் போராட்டத்திலே அர்பணித்துக் கொண்டவர். அந்தப் போராட்டத்திலே திலீபன் அளப்பரிய பங்காற்றி வந்ததனால் தேசியத் தலைவர் பிரபாகரனினால் புலிகளின் அரசியற்பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அந்த வேளையில் தமிழ் மக்கள் தங்களது விடுதலைப் போராட்டத்தை நடத்தி அதிலே வெற்றி பெறவிருந்த தொரு காலகட்டத்தை அடைந்து வருகின்ற அந்தக் கணிந்த காலத்திலே சிங்கள அரசுடன் சேர்ந்து இந்திய அரசும் செய்த சதிச் சூழ்ச்சியில் தமிழினம் சிக்கியிருந்து பாரிய அழிவுகளைச் சந்தித்திருந்தது.

இக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த இராசையா பார்த்தீபன் எனும் சொந்தப் பெயரைக் கொண்ட திலீபன் எனும் விடுதலைப் போராளி தனது இனத்திற்காக இந்திய அரசிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு புலிகளின் தலைவரிடம் அனுமதி கேட்டார்.

இந்திய அரசு அத்தகைய போராட்டத்தை ஏற்கும். உலகம் அதைப் புரிந்து கொள்ளும் என்பதற்காக அவர் உண்ணாநோன்பிருக்க நல்லூர்க் கோவில் வடக்கு வீதியிலே அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அன்று நல்லூர் வீதியெங்கும் தீலிபனுடைய தீயாக வேள்வியைப் பார்ப்பதற்கு தினந்தினம் பல ஆயிரக்கணக்கான மக்கள் போவார்கள்.

அந்த வேள்வியிலையே ஒலிக்கின்ற கவிதைகள்; கவிஞர் புதுவை இரத்துனதுரையின் கவி வரிகளிலே விடுதலையை உணர்வுகளை வாட்டுகின்ற அத்தகைய வரிகளும் வந்து பாரடா வந்து பாரடா வாட முன்னொரு செய்தி கூறடா இந்திரா பெற்றெடுத்தவ வந்து பாரடா இங்கு ஓர் உயிர் வாடுகின்றது இதய நாடிகள் ஒடுங்குகின்றது தங்க மேனியைக் காவு திண்னுது வந்து பாரடா என்ற கவிதை வரிகள் நல்லூரான் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்ததது. அவருடைய விடுதலை வேள்வி யாகத்திற்கு புதுவை இரத்தினதுரை கவிதையிலே ஒரு அர்ச்சணை செய்து கொண்டிருந்தார்.

ஒவ்வொரு இடங்களில் இருந்தும் ஒவ்வொரு நாளும் பேராளிகளலெல்லாம் அணி அணியாக திலீபனுடைய ஒண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அதே போன்று மக்களும் பல ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டிருந்தனர்.

அதிலும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அந்தப் போராட்டத்திலே வந்து கலந்து கொண்டிருந்தார். அவர் தீலிபனைச் சந்தித்து சில வாக்குறுதிகளையும் பெற்றிருந்தார். ஆனாலும் தீலிபன் தன்னுடைய மக்களுக்காக தான் எடுத்த அந்தக் கொள்கையிலிருந்து தன்னை விடுவிப்பதில்லை என்ற உறுதியிலே இருந்ததனால் தலைவர் கூட அந்தப் போராளியின் மரணத்தைத் தடுக்க முயற்சித்த போதும் முடியவில்லை.

இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திலே ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களுடன் பேசிக் கொண்டிருந்த தீலிபன் 12 நாட்கள் கடந்த நிலையில் 12 ஆம் நாளில் தியாக தேசத்திற்கு தியாகத்தை உணர்த்திவட்டு தியாக மரணடைந்தார்.

இதனால் இந்தியாவின் கபடத்தனமும் வேசமும் உலகமும் அறிய வேண்டும். மக்களும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அந்தப் புனிதமான போராளி தன்னுடைய தியாகத்தின் உச்சத்திற்குச் சென்றார்.பாடும் பறவைகள் பாடுங்கள் புலி வீரர் தீலீபனின் பாடுங்கள் என்கின்ற வரிகளும் அன்று தான் ஒலிக்கத் தொடங்கியது.

அன்று தமிழ் மக்கள் மத்தியிலே எல்லோரையும் அழ வைத்த மரணம்.தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றிலே ஒரு வித்தியாசமான மைல்கல். களத்திலே போராடி வீரச்சாவடைவதைவிட தன்னினத்துக்காக நீராகரம் ஏதம் அருந்தாமல் போராடி தன் உயிரைத் துறந்த மாபெரும் தீயாகியாக உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மத்திலே ஓர் வித்தியாசமானவராக பார்க்கப்பட்டார்.

ஆந்தப் போராட்டத்தில் தான் இறந்ததன் பின்னர் தன்னுடைய உடலைக் கூட மருத்துவ பீட மாணவர்கள் கற்பதற்காகக் கொடுக்குமு; படியும் கூறியிருந்தார்.

இதே வேளை இந்தக் காலப்பகுதியிலே இந்திய அரசின் இலங்கைத் தூதுவராக இருந்தவர் தீலபனுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை திரை மறைவில் தடுப்பதற்கு எத்தனையோ சதிகளை மேற்கொண்டிருந்தார்.

அந்தச் சதிகளை எல்லாமே தமிழினத்திற்கும் தமிழின விடுதலைக்குமான போராளியான தீலிபன் தகர்த்தெறிந்து புனிதமானதொரு போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். இந்தப் போராட்டத்தினூடாக இந்தியாவினுடைய போலித் தனத்தையும் கபடத்தனத்தையும் உலகமெங்கும் காட்டி தியாக மரணமடைந்தார்.

தீலிபன் தியாக மரணமடைந்த காலப்பகுதியில் தீலிபனுடைய இறுதி நிகழ்வுகள் இரண்டு மூன்று நாட்களாக தீவகம் வடமராட்சி தென்மராட்சி வலகாமம் என்ற யாழ்ப்பாணத்தின் நான்கு பிரதேசங்களிலும் பூதவுடல்கள் மக்களுடைய அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அருவடைய புகழுடல் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு கையளிக்கப்பட்டது.

அந்த வகையில் ஈழ விடுதலைப் போராட்டத்திலே ஓர் வித்தியாசமான அரசியல் போராளியாக வாழ்ந்து தன்னுடைய வாழ்க்கையை தமிழ்த் தேசியத்திற்காகவும் தமிழினத்திற்காகவும் தியாகம் செய்த அற்புதமான போராளி.

ஆனால் அன்று எங்கள் மக்களுடைய மனங்களிலிலெல்லாம் நிறைந்திருந்த அற்புதமான அந்தப் மாபெரும் தியாகி இன்று முப்பது வருடங்களுக்குப் பின்னரும் மக்களின் மனங்களில் நிங்கா இடம்பிடித்திரிருக்கின்ற தியாகியாகவே காணப்படுகின்றார். அப்படிப்பட்ட அந்தப் தியாகச் செம்மல் மக்கள் மனங்களில் தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதற்காகவும் அந்த மக்கள் நேசிக்க வேண்டுமென்பதற்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.

தமிழர்களுக்கான எந்த தேசியக் கட்சிகளும் தமிழர் விடுதலைப் போராட்டம் தொடர்பான ஓர் தெளிவான பாதையையும் பார்வையையும் மக்களுக்குக் காட்டுவதில்லை. இன்றைய தமிழ் மக்களின் தேவை என்ன, அரசியல் கைதிகளின் நிலை என்ன. அன்று தீலபனுடைய போராட்டத்திலே கூட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும.

தமிழ மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும். தமிழ் மக்களுடைய பிரதேசங்களிலிருந்து இரானுவம் வெளியேற வேண்டும் என எத்தனையோ அரசியல் போராட்டங்களின் புதிய புதிய வடிவங்களையெல்லாம் தீலிபன் தனது ஐந்து அம்சக் கோரிக்கையிலையே முன்வைத்திருந்தார்.
ஆனால் இன்றைக்கு தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருக்கின்ற அதே அரசியல் வாதிகள் தங்களது பாராளுமன்றக் கதிரைகளில் இருந்து விட்டு வருவது தான் வழமை .

அது தான் அவர்களது கடமையாகவும் இருக்கின்றது. அதே போன்று தான் தேசியம் பேசுகின்ற ஏனைய அரசியல் வாதிகளும் தங்களுக்கும் பாராளுமன்ற கதிரைகளைப் பிடிப்பதற்கும் தங்களது அரசியல் கதிரைகளைக் காப்பாற்றுவதற்குமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக தேசியம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்த அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ்த் தேசத்திற்காகவும் தமிழினத்திற்காகவும் குரல்கள் ஒலிப்பதில்லை. இனத்திற்காகவும் தேசத்திற்காகவும் பாடுபட்ட, அர்ப்பணித்த, தியாகம் செய்த, உயிரை இழந்த ஒவ்வொரு போராளிகளுக்கு மத்தியிலும் இந்த அரசியல் வாதிகளுடைய போலி முகங்கள் எல்லாம் வெகு விரைவில் அரங்கேற வேண்டும். மக்கள் விடுதலைப் போராளிகளை புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைக்கான போராட்டத்தின் வடிவத்திலே எத்தனையோ வடிவங்கள் இருக்கின்றன. அத்தகைய வடிவங்களை கைக்கொள்ள வேண்டும். அரசியல் வாதிகளை நம்பி ஏமாறுகின்ற இந்தச் சமூதாயம் விழித்தெழ வேண்டும்.

தன்னினத்தின் விடுதலைக்காக சுhதாரண பேராளி தியாகம் செய்த அளவிற்கு அந்த இனத்தை வைத்து தேசியம் பேசுகின்ற அரசியல்வாதிகள் ஏதும் செய்யவில்லை. இறுதியாக முள்ளி வாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்ட போதும் அரசியல் தலைவர்கள் பலரும் சுகபோகங்களையே அனுபவித்துக ;கொண்டிருந்தனர். அதே போன்று இன்றைக்கும் எம் மக்கள் பல்வேறு வழிகளிலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அன்றைக்கு தேசியம் பேசி மௌனமாக சுகபோகங்களை அனுபவித்த அதே அரசியல்வாதிகள் தான் இன்றைக்கும் தேசியம் பேசிக் கொண்டு எல்லாவற்றையும் பார்த்து வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள். தியாகம் என்பது அன்றைக்கும் போராளிகள் மத்தியிலையே பார்த்த மக்கள் இப்போதும் தீயாகம் என்பதை போரிகள் மத்தியிலையே பார்த்திருக்கின்றரே ஒழிய அரசியல்வாதிகளிடம் பார்க்கவில்லை.

எஸ்.நிதர்ஷன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்