துன்னாலை வாள்வெட்டு சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடரும் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துன்னாலை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய குறித்த சந்தேநபர், வட்டுக்கோட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துன்னாலை பகுதியில் கடந்த மே மாதம் முதல் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டு வந்த மோதலில், இதுவரை சுமார் 5 பேர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேசத்தில் மணற்கொள்ளையில் ஈடுபடும் குழுவினருக்கும் அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்களுக்கும் இடையிலேயே இவ்வாறு முறுகல் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்