பார்த்தீபனை உயிர்த்தெழுந்து மீண்டுமொரு முறை மரணிக்க நிர்ப்பந்திக்கும் கூட்டமைப்பு!

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகெங்கும் நடைபெற்று வரும் நிலையில் இறுதி நிகழ்வாக அவர் உண்ணாவிரதமிருந்து எம் இனத்தின் விடுதலைக்காக தம்முயிரை ஆகுதியாக்கிய செப்-26 காலை 10.48 மணியளவில் அதே நல்லூர் வீதியில் வணக்க நிகழ்விற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயகப் போராளிகள் அமைப்பு ஆகியவற்றினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அண்ணன் சிவாஜிலிங்கம் அவர்கள் தலைமையில் வட மாகாண முதல்வர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் பங்கேற்கும் நினவு வணக்க நிகழ்வு அன்று மாலை 6.05 க்கு அதே இடத்தில் நடைபெற உள்ளத்தக அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிரு நாட்கள் பசி மறந்து பார்த்தீபன் மேற்கொண்ட தியாகப் பயணம் முற்றுப்பெற்ற காலை 10.48 மணிக்கு பேதமைகள் துறந்து ஒன்றாக நினைவு வணக்கம் செலுத்த முடியாதவர்களா இன நலனிற்காக பாடுபடப் போகின்றார்கள்…?

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் நிகழ்வானது செப்-26 காலை 10.48 மணிக்கே நடைபெற்றாக வேண்டும். மாறாக காரணம் எதுவாக இருக்கட்டும்… யாருக்காகத்தன்னும் இருக்கட்டும்… குறித்த நேரத்திற்கு பின்னர் ஏற்பாடு செய்வது ஏற்புடையதல்ல.

நித்திய உறக்கத்தில் இருக்கும் பார்த்தீபனை உயிர்த்தெழுந்து மீண்டுமொரு முறை மரணிக்கச் செய்யும் விதமாகவே கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு அமைந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்