இனி விக்கியை டெலோ ஆதரிக்காது

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் இந்த ஆட்­சிக் காலத்துக்குப் பின்­னர் அவ­ருக்கு எந்­தக் காரணம் கொண்­டும் ஆத­ர­வ­ளிப்­ப­தில்லை என்று ரெலோ அமைப்பு தீர்க்­க­மாக முடிவு செய்­துள்­ளது. முதல்­வ­ரின் தற்­போ­தைய பத­விக் காலம் வரைக்­கும் மட்­டுமே ஆத­ர­வ­ளிப்­பது என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. வவு­னி­யா­வில் நேற்று நடை­பெற்ற அந்­தக் கட்­சி­யின் தலை­மைக் குழுக் கூட்­டத்­தில் இந்த முடிவுகள் எடுக்­கப்­பட்டன.

அந்­தக் கட்­சி­யின் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன், ந.சிறிகாந்தா, ஹென்றி மகேந்­தி­ரன், பிர­சன்னா இந்­தி­ர­கு­மார், கோவிந்­தன் கரு­ணா­க­ரம், விந்­தன் கன­க­ரட்­ணம், வினோ­நோ­த­ரா­த­லிங்­கம் உள்­ளிட்ட 15 பேர் கொண்ட தலை­மைக் குழு உறுப்­பி­னர்­கள் கூட்டத்தில் கலந்துகொண்­ட­னர்.

இந்­தக் கூட்­டத்­தில் பல்­வேறு அர­சி­யல் விட­யங்­கள் அலசி ஆரா­யப்­பட்­டன. இதன்­போது, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு இந்­தப் பத­விக் காலம் முடி­வ­டை­யும் வரை­யில் (அடுத்த ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம்) ரெலோ முழு­மை­யான ஆத­ர­வை­யும் – ஒத்­து­ழைப்­பை­யும் வழங்­கு­வது என்­றும், அதன் பின்­னர் அவ­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தில்லை என்­றும் முடிவு செய்­துள்­ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்