சிறிலங்கா காவல்துறையில் சேர தமிழர்கள் தயக்கம் காட்டுகின்றனர் – ரணில் விக்கிரமசிங்க!

சிறிலங்கா காவல்துறையில் இணைந்துகொள்வதற்கு தமிழ் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லையென சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் 7000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 10 வீதத்திற்கு தமிழ் இளைஞர்களைச் சேர்த்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால் நேர்முகத் தேர்வுக்கு 180பேர் மாத்திரமே வருகை தந்தனர்.

காவல்துறை வெற்றிடங்கள் அனைத்தும் வடக்கில் இருந்தே நிரப்பப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இருந்து இதனை ஆராய வேண்டும்.

இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க, காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளேன் எனத் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*