உலகிலேயே பருமனான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

மும்பையில் சிகிச்சை பெற்ற உலகிலேயே மிகவும் பருமனான பெண் எமான் அஹமத், அபுதாபியில் உயிரிழந்துள்ளார்.

அபுதாபி மருத்துவமனையில் தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி, ஒரு வாரத்தின் பின்னர் எமான் அஹமது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எகிப்தின் கெய்ரோவைச் சேர்ந்த பெண் எமான் அஹமது (வயது36). இவர் தனது 11 ஆவது வயதில் பக்கவாத நோயாலும் உடற்பருமனாலும் படுத்த படுக்கையானார்.

மேலும், யானைக்கால் நோய் மற்றும் உடற்சுரப்பிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாகவும் இவரது உடற்பருமன் அதிகரித்தது.

சுமார் 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், எமான் அஹமதின் எடை 504 கிலோவானது. எனவே, அவர் உலகிலேயே மிகவும் குண்டான பெண்ணாகக் கருதப்பட்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை அவருக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது.

இதற்காக 2 கோடி இந்திய ரூபா செலவில் அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

மூன்று மாத சிகிச்சைகளின் பின்னர் அவரின் எடை 242 கிலோவாகக் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், அதை எமானின் சகோதரி மருத்ததுடன், சிகிச்சைகளின் பின்னர் எமானுக்கு உடலில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த பிரச்சினைகளை அடுத்து, எமான் அஹமது மும்பையில் இருந்து எமிரெட்ஸ் அனுப்பப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இதயத்தில் பிரச்சினை மற்றும் சிறுநீரகம் செயற்படாமை காரணமாகவே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்