ஈராக்கிலிருந்து தனி நாடாக பிரிகிறதா குர்திஸ்தான்? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!!!

ஈராக்கில் இருந்து தனி குர்திஸ்தான் நாட்டை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பில் ஏராளமானோர் பங்கேற்பு

ஈராக்கில் இருந்து தனி குர்திஸ்தான் நாட்டை உருவாக்க வேண்டும் என்று மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகள் மற்றும் துறைமுகங்களை ஒப்படைக்கும்படி குர்திஸ்தான் அதிகாரிகளுக்கு ஈராக் அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் ஈராக்கின் ஒற்றுமையை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி உறுதியளித்தார். மேலும் குர்திஸ்தான் பகுதியில் இருந்து எண்ணெய் வாங்குவதை பிற நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குர்திஸ்தான் தனி நாடாக பிரிக்கப்பட்டால் உள்நாட்டு போர் வெடிக்கலாம் என்றும் இதன் மூலம் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க வழி ஏற்படும் என்றும் மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன. இந்நிலையில் பொதுமக்களுடன் இணைந்து வாக்கெடுப்பில் வாக்களித்த குர்திஸ்தான் தலைவர் மசூத் பர்சானி ”தனி நாடு ஒன்றுதான் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்” என தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்