தியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு வெளியிட்டுள்ள தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்ச்சி நிரல் அறிவித்தல்

தியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
யாழ் மாவட்டம்
2017 புரட்டாதி 25

தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்ச்சி நிரல்

தியாக தீபம் திலீபன் அவர்கள் தன்னுடலை மெழுகாய் உருக்கி எம் மக்களுக்காக இம் மண்ணை விட்டுப் பிரிந்த இறுதி நாளான 26-09-2017 (செவ்வாய்க்கிழமை) அவரது தியாகங்களை நினைவு கூரும் இறுதி நாள் நிகழ்வுகள் கீழ்வரும் ஒழுங்கில் இடம்பெறும்.
1. ஆரம்ப நிகழ்வு
நல்லூரின் வடக்கு வீதியில் தியாகி திலீபன் அவர்கள் உண்ணா நோன்பிருந்து
உயிர்துறந்த இடத்தில் அவரது உயிர் பிரிந்த நேரம் காலை 10.58 மணிக்கு குறித்த இடத்தில் அகவணக்கம் செலுத்தப்படும்.
2. அந்நிகழ்வைத் தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் அனைத்தும் அவரது நினைவுத் தூபியில் இடம்பெறும்.
நினைவுத் தூபியில் இடம்பெறும் நிகழ்வு ஒழுங்குகள்
• நினைவுத் தூபியில் நிகழ்வுகள் மு.ப 11.10 மணிக்கு ஆரம்பமாகும்.
(நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு பின்புறமாக அமைந்துள்ள நினைவுத் தூபி)
• பொது ஈகைச் சுடர் ஏற்றல்
• மலர் மாலை அணிவித்தல்
• மலர் வணக்க நிகழ்வுகள்
• உயிர்த்தியாகம் செய்த மாவீரர்கள் பொது மக்களுக்கு அகவணக்கம்
• நினைவுரைகள்
• கவிதாஞ்சலி நிகழ்வு
மேற்படி நிகழ்வு அமைதியாகவும் உணர்வுபூர்வமானதாகவும் அமைய அனைத்து பொது மக்களையும், அரச, அரச சார்பற்ற நிறுவனத்தினரையும், தனியார் துறையினரையும் கலந்து கொண்டு ஒத்துழைக்குமாறு கோருகின்றோம்.

நன்றி
சு.சுதாகரன்
(ஏற்பாட்டாளர்கள் சார்பில்)
தியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு
யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு: 0764191267

About இலக்கியன்

மறுமொழி இடவும்