திலீபன் தூபி முன்னதாக மூக்குடைபட்ட தமிழரசு!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினில் பங்கெடுக்க வந்த தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சரவணவபவனை மக்களோ ஏற்பாட்டாளர்களோ கண்டுகொள்ளாமையினால் அல்லாடித்திரிந்த பரிதாபம் இன்று நடந்துள்ளது.இன்றைய நினைவேந்தல் நிகழ்வினை குழப்பியடிக்கும் வகையினில் முன்னதாக வடமாகாண அமைச்சர் அனந்தி தனது ஆதரவாளர்கள்,புகைப்பட கலைஞர்கள் சகிதம் சுடரேற்றிய பின்னர் தனது சொகுசு வாகனத்தினில் திரும்பிவிட்டார்.

இதன் பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,ஜனநாயகப்போராளிகள் கட்சி மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து நடத்திய பொதுநிகழ்வு நடந்திருந்தது.இந்நிகழ்விற்கு வந்திருந்த வேளையிலேயே தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சரவணவபவனை மக்களோ ஏற்பாட்டாளர்களோ கண்டுகொள்ளாமையினால் அல்லாடித்திரிந்த பரிதாபம் நடந்தது.எனினும் தமிழரசு தலைவர்கள் இடித்து முட்டி மோதி புகைப்படங்களிற்குள் தங்களை செருகிக்கொண்டனர்.

இதனிடையே மூத்த உணர்வாளர் ஒருவர் நினைவுரையினை மாவை சேனாதிராசா ஆற்றினால் தான் எதிர்த்து குரல் எழுப்புவேன் என ஏற்பாட்டளர்களை எச்சரித்த சர்ச்சையும் நடந்திருந்தது.
இதனிடையே புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக பங்காளிக் கட்சிகள், மற்றும் தமிழ் புலமையாளர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பங்காளிக் கட்சிகள் மற்றும் புலமையாளர்களுடன் இடைக்கால அறிக்கை தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படுமென மாவை தெரிவித்துள்ள போதும் சுமந்திரன் தரப்பு அதனை நடத்த அனுமதிக்குமாவென்பது தெரியவில்லை.

About இலக்கியன்

மறுமொழி இடவும்