காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு முல்லையில் அனுஸ்ரிப்பு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடி ஈழத்தமிழ் மக்களது விடுதலைக்காக தனது உயிரை ஈகம் செய்த தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ மலரட்டும் என்று உலகத் தமிழருக்கு அறைகூவல் விடுத்த திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வை அகிம்சை வழியில் போராடும் தாமும் அனுஸ்ரிப்பதாகவும் மக்கள் புரட்சி வெடித்துள்ளதாகவும் திலீபன் அண்ணாவின் கனவு நனவாகும் காலம் கணிந்துள்ளதாகவும் தெரிவித்து காணாமல் ஆக்கபப்ட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக இன்று 203 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாகவுள்ள போராட்ட கொட்டகையில் மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

தியாகி திலீபனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்வில் வடமாகான சபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்