பெண்களுக்கும் சம உரிமை வழங்குகிறது சவுதி

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கார் செலுத்துவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, மைதானத்தில் சில விளையாட்டுக்களை நேரில் பார்ப்பது என பெண்களுக்கான பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன.

சமீப காலமாக சவுதி நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அந்நாட்டின் வீராங்கனைகள் பங்கேற்றனர். மேலும், சர்வதேச பெண்கள் தினம் சமீபத்தில் அரண்மனையில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டில் உள்ள பெண்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதியளிக்க மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும், ஓட்டுநர் உரிமங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு பெண்கள் நல ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்