தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – ஜ.நாவில் வைகோ

இலங்கையில் தமிழர்கள் பகுதியில் உள்ள சிங்கள ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்ற வேண்டும் என்றும், தனி தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஐநா மனித உரிமை கவுன்சிலில் உரையாற்றினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து வைகோ உள்ளிட்ட பல நபா்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய வைகோ, சுதந்திர தமிழ் ஈழத்திற்காக ஐநா மன்றத்தின் மேற்பார்வையில் வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இலங்கையில் தமிழர்கள் பகுதியில் உள்ள சிங்கள ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, ஜெனீவாவில் சிங்களர்கள் சிலர் தம்மை சூழ்ந்து மிரட்டும் வகையில் பேசியதாக வைகோ குற்றம்சாட்டி இருந்தார். அதனையடுத்து, வைகோவின் பாதுகாப்புக்கு இரண்டு காவலர்களை ஐநா நியமனம் செய்துள்ளது. தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்