ஈராக்கிய குர்திஸ் மக்கள் சர்வஜனவாக்கெடுப்பில் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக ஈராக்கிய குர்திஸ் மக்களின் தலைவர் மசூட் பர்சானி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி மூலம் தனது மக்களிற்கு ஆற்றிய உரையில் ஆம் என்பது வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஈராக்கிய அரசாங்கம் குர்திஸ் பிராந்திய அரசாங்கத்தை தடைகளை விதிப்போம் என அச்சுறுத்துவதற்கு பதில் அதனுடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நாங்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் ஆனால் நாங்கள் அவற்றை வெற்றிகொள்வோம்,என தெரிவித்துள்ள அவர் உலகின் சக்திவாய்ந்த நாடுகளை ஈராக்கிய குர்திஸ் மக்களின் விருப்பத்தை மதிக்குமாறு கோரியுள்ளார்.