குர்திஷ் விமான நிலையங்களை கையளிக்க ஈராக் அரசு கெடு!

குர்திஷ் பிராந்திய அரசு தனது விமான நிலையங்களை கையளிக்காவிட்டால் சர்வதேச வான் தடை ஒன்று விதிக்கப்படும் என்று ஈராக் அரசு எச்சரித்துள்ளது.

எனினும் தமது மக்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக குர்திஷ் தலைவர் மசூத் பர்சானி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பாலான குர்திஷ் வாக்காளர்கள் தனிநாடாக சுதந்திர பெறுவதற்கு ஆதரவு அளித்திருப்பதாக பர்சானி குறிப்பிட்டார்.

எனினும் குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள விமான நிலையங்கள் ஈராக் மத்திய அரசிடம் கையளிக்க வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதில் குர்திஷ் பிராந்தியத்திற்கான சர்வதேச விமானப்போக்குவரத்துகள் நாட்டின் ஏனைய விமான நிலையங்கள் ஊடாகவே இடம்பெறும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.

குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள எர்பில் மற்றும் சுலைமானியா விமான நிலையங்களுக்கு நேரடி விமானப்போக்குவரத்துகளை நிறுத்திக் கொள்ளும்படி ஈராக் அரசு வெளிநாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது. குர்திஸ் பிராந்திய அரசு எல்லைச் சாவடிகளை வெள்ளிக்கிழமைக்குள் கையளிக்காவிட்டால் அந்த பிராந்தியத்திற்கான அண்டை நாடுகளின் எல்லைகளை மூடும்படி கோரப்போவதாக ஈராக் அரசு குறிப்பிட்டுள்ளது.

குர்திஷ் மக்கள் வாழும் அண்டை நாடுகளான துருக்கி மற்றும் ஈரானும் இந்த சர்வஜன வாக்கெடுப்பை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த தேர்தல் தமது நாடுகளில் உள்ள குர்திஷ் மக்களிடம் பிரிவினையை தூண்டும் என்று இந்த நாடுகள் அஞ்சுகின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்