சிங்களத்தை விழுந்து கும்பிடுவதை தமிழ் இனம் நிறுத்த வேண்டும்.

தமிழனத்தின் கௌரவத்தினை தமிழினம் பாதுகாக்க வேண்டும். முட்டாள் தனமாக சிங்களவருக்கு முன் விழுந்து கும்பிடுவதை தமிழர்கள் நிறுத்த வேண்டும். தலைவர் பிரபாகரன் தமிழனுக்கு என வீரம் உண்டு, கலை கலாச்சாரம் உண்டு என 30 வருடமாக உலகிற்கு காட்டியவர். இதனால் தான் சர்வதேசம் தமிழனுக்கு அரசியல் தீர்வு தேவை என்கின்றது. அரசியல் தீர்வு இல்லாவிட்டால் மீண்டும் வீரத்தமிழர்கள் யுத்தத்தினை ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயம்.

இப்படியான நேரத்தில் 4 சம்பவங்களை நாம் கண்டிருக்கின்றோம்.
1. வேலையில்லா பட்டதாரிப் பெண்கள் வடமாகாண ஆளுனரை காலில் விழுந்து கும்பிட்டது.
2. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆவதற்கு தமிழன் புத்த பிக்குவை விழுந்து கும்பிட்டது.
3. தனது கைத்துப்பாக்கியை கவனமாக பாதுகாக்க தெரியாத சிங்கள போலீஸ் இறந்ததால், தொடர்பான நீதி அரசர் இரண்டு தடவை சிங்களவர் முன் விழுந்து கும்பிட்டது.

தேவைகள், இழப்புக்கு அனுதாபம், பதவி உயர்வுக்கு சந்தோசம், மதகுருமாருக்கு வழிபாடு எல்லாம் வார்த்தையாலும், நின்றபடி கை பரிமாறுவதாலும் செய்ய முடியும்

தமிழனத்தினை அடிமையாக்கும் இந்த செயல்களை தமிழர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். சிங்கள பிக்குகள் தமிழர்களை அழிக்க வேண்டும் என்று சபதம் எடுத்தவர்கள் என்று சிங்கள மகாவம்சம் கூறுகின்றது. ஏன் இந்த பிக்குகளை விழுந்து கும்பிடவேண்டும்.

தமது பதவி உயர்வுக்கு அல்லது தேவைகளுக்கு யாரையும் விழுந்து கும்பிட வேண்டும் என்றால் தனி அது ஒரு மடமைத்தனம்.

தமிழன் தனது கௌரவத்தினை விட்டுக்கொடுக்காது, ஒரு சில அடிமைகள் செய்யும் இந்த கூத்தினை நிற்பாட்ட வழி வகுக்க வேண்டும்.

நன்றி,
புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஊடகம்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்